ஆன்மிகம்

வந்தாள் அபிராமி; மலை மீது வருவாள் அபிராமி

வந்தாள் அபிராமி; மலை மீது வருவாள் அபிராமி… திண்டுக்கல்லின் அடையாளமாக   பத்மகிரி மலை திகழ்ந்து வருகிறது.   சிவபெருமானே  தாமரை வடிவில் தோன்றி பிறகு சுயம்புவாக மலை வடிவத்தில் காட்சி தருகிறார் என உணர்ந்தவர் அகத்திய மாமுனிவர். அவரே இந்த பத்மகிரியை முதன் முதலாக கிரிவலம் வந்ததாக   ஸ்தல வரலாறு சொல்கிறது. சேர மன்னன் தர்மபாலர் மலைமீது  ஆலயம் அமைத்தார்.  பத்மகிரீஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.  1788ல் திப்பு சுல்தான் படையெடுப்பில் மலை மீதிருந்த தெய்வத் திருமேனிகள் அகற்றப்பட்டு வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. சுமார் 250 ஆண்டுகளாக கோயில் இருந்தும் வழிபாடு இல்லாதது மக்கள் மனதில் பெரும் வேதனையாக இருந்து வருகிறது. இந்த இழிநிலை மாற மக்களின் ஏக்கம் தீர்க்க ஹிந்து முன்னணி  களத்தில் இறங்கியது. மலையின் பெருமையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே  பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும்   கிரிவலத்தை  ஒவ்வொரு  பௌர்ணமி தினத்தில்    மிக சிறப்பாக நடத்த செயல்பட்டு வருகிறது. மலைக்கோயிலில் சுவாமி திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய   மக்கள் ஆதரவை மேலும் திரட்ட முடிவு செய்தது  ஹிந்து முன்னணி. திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டுகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்துவது முடிவு செய்து. ஜூலை ௫ முதல் ௨௦ வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு தினம்தோறும் 345 பேர் வீடு வீடாக சென்று கையெழுத்துப் பெறும் பணியில்  ஈடுபட்டனர். 50,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டன. ஊரில் உள்ள பெரியோர்களுக்கு பத்மகிரிமலை மற்றும் மலை கோயிலின் பெருமைகளை தெரிவிப்பதோடு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதையும் தெரிவிக்க வேண்டும்  என யோசனையானது. வந்தாள் அபிராமி என்ற தலைப்பில் உள் அரங்கில் “சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து ஊர் பெரியவர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.   ஆகஸ்ட் 9ல் ஏற்பாடான இந்த நிகழ்ச்சியில்  அழைக்கப்பட்ட பெரியவர்களில் 90 சதவீதம் பேர் வருகை தந்தனர். அம்மையப்பர் திருமேனிகள் மேடையில் அலங்கரிக்கப்பட்டு சிவ வாத்தியம் இசைக்க  வழிபாட்டோடு நிகழ்ச்சி துவங்கியது. இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் க.பக்தன் அகத்தியர் காலம் தொட்டு கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் தாத்தா உ.வே.சா வரை பத்மகிரி மலையின் சிறப்புகளை அற்புதமாக ஆதாரத்தோடு விளக்கிப் பேசினார். கட்டுரையாளர் : மாநில செயலாளர், இந்து முன்னணி.

சங்கம்

விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர்

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் பத்மபூஷன்  டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத்  சிறப்புரையாற்றுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஆறு முக்கிய பண்டிகைகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இவை அனைத்துமே சனாதன தர்மத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன. ஸ்வயம்சேவகர்களுக்கு அனைத்து பண்டிகை களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், விஜயதசமி விழாவிற்குஒரு சிறப்பிடம் உள்ளது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு விஜயதசமி அன்றுதான் (27 செப்டம்பர் 1925) நிறுவப்பட்டது. 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற  ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சங்கத்தின் நூற்றாண்டில், கவனம் கொடுக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இவற்றை வெகுஜன இயக்கமாக எடுத்து செல்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பஞ்ச பரிவர்த்தன் எனப்படும் ஐந்து முக்கிய முன்னெடுப்புகள், தொடர்ந்து நடைபெறும். இவற்றில் சங்கத்தின் சகோதர அமைப்புகளும் பங்கேற்கும். 5 முக்கிய முன்னெடுப்புகள் சமூகநல்லிணக்கம்: சமூக முன்முயற்சிகளில் பல்வேறு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல். குடும்பவிழிப்புணர்வு: குடும்பங்களை குறிப்பாக, நவீன காலத்தில் நகர்புறத்தில் வசிக்கும்  குடும்பங்களை  வலுப்படுத்தி அதன் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுதல் சுற்றுச்சூழல்பாதுகாப்பு:சமுதாயத்தின் பங்களிப்புடன் சுற்றுச்சூழலுடன் ஒத்த வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதுன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் சுதேசி(ஸ்வா):நமது வாழ்க்கை முறை, மொழி,…

கதை

பழி வாங்கப் போறீங்களா?

எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்” என்று ஒரு சாமியார் முன் பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம்…

திருந்தும் வழி

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, “”நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்”. மறுநாள்…

சேவை

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்டு நாயனார் பிறந்த திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று பிறந்தார். தந்தை முத்தையா தேசிகருக்கு ஆலயங்களில் தேவாரம் பாடும் பணி.…