கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் துஷாரா’ என்ற ஒரு பிரத்யேக ஹலால் அல்லாத உணவகத்தைத் முதன்முதலாக திறந்துள்ளார் துஷாரா. “ஹலால் இல்லை, ஹலால் பக்ஷனம் நிஷிதாம்” (ஹலால் உணவு இங்கே தடை செய்யப்பட்டுள்ளது) என்று இந்த உணவகத்தின் வெளியே ஒரு போர்ட் வைக்கப்பட்டுள்ளது. தன் ஹலால் இல்லாத உணவகத்தை துவங்கி நடத்துவதற்கான முயற்சியை பல முஸ்லிம்கள் தடுக்க முனைந்தனர். ஹிந்துக்கள் எந்தவொரு தொழிலையும் தொடங்கும்போதும் முஸ்லிம்கள் அதில் தலையிட முயற்சிக்கின்றனர். ஹலால் அல்லாதவற்றை சாப்பிட விரும்பும் பலர் உள்ளனர். ஹலால் அல்லாத உணவு, ஹலால் உணவை சாப்பிட ஒருவரை கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார் இந்த உணவகத்தை நடத்தி வரும் துஷாரா. கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இப்போது ஹலால் இறைச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.