நேற்று முன் தினம் பாரத பிரதமர் துவங்கி வைத்த உலகின் மாபெரும் தடுப்பூசி நிகழ்வுக்கும், பாரத விஞ்ஞானிகளின் முயற்சிக்கும், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், பிரதமர் மோடி தன் உலகிற்கே தன் இரக்கமும் அன்பும் உள்ள தலைமையை நிரூபித்துள்ளார் என தன் பாராட்டை தெரிவித்தார். முன்னதாக பூடான் 10 லட்சம் தடுப்பூசிகளை பாரதத்திடம் கோரியுள்ளது. இதைத்தவிர, வங்கதேசம், பஹ்ரைன், கத்தார், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென் கொரியா, இலங்கை, மியான்மர், சீஷெல்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாரதத்தின் தடுப்பூசியை பெற ஆர்வமாக உள்ளன என்பது நமக்கு பெருமை தரும் செய்தி.