வெள்ளிக்கிழமை விடுமுறை விசாரணை

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் வாராந்திர விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ஜம்தாரா மாவட்டத்தைத் தொடர்ந்து, தும்கா மாவட்டத்தில் உள்ள 33 அரசுப் பள்ளிகளுக்கு அதிகாரிகளின் அனுமதியின்றி ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படுகிறது. தும்கா முதல்வர் ஹேமந்த் சோரனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியாகியுள்ளதையடுத்து, இது குறித்து 33 பள்ளிகளின் தொகுதிக் கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அந்த பள்ளிகளிடம் விரைந்து இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கோரியுள்ளனர். அதன் பிறகு முறைப்படி விசாரணை தொடங்கப்படும். வெள்ளிக்கிழமையன்று பள்ளிகளை மூடுவதற்கு எந்த உத்தரவும் அரசால் வழங்கப்படவில்லை. இந்த பள்ளிகளுடன் உருது எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது, எந்த சூழ்நிலையில் அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.