முஸ்லிம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானில், அதன் மதம் மற்றும் கடவுளை விமர்சனம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டன, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. மதநிந்தனையில் ஈடுபட்டதாக கூறி பலரை அடித்துக்கொன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அங்குய்ள்ள சிறுபான்மை மதத்த்தினரை பழிவாங்க இது யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, இணையதள தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் முஸ்லிம் மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த கருத்துக்களை விக்கிப்பீடியா 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று,ம் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. ஆனால், விக்கிப்பீடியா அதன் கருத்துக்களை நீக்கவில்லை. இதனையடுத்து விக்கிப்பீடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. மதநிந்தனை கருத்துக்கள், கடவுள், மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட்ட பின்னரே விக்கிப்பீடியா இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.