வார ராசிபலன் – விகாரி வருடம், தை 19 முதல் தை 25 வரை( பிப்ரவரி 02 – 08) 2020

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: சொல்வன்மையால் சம்பாத்தியம் உயரும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். சொற்களை பயன்படுத்தும்போது தெளிவாகப் பேச வேண்டும். பல சமயங்களில் நாவடக்கம் தேவை.

பெண்மணிகள்: குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கையினால் மனமாற்றம் ஏற்படலாம். அமைதி ஆற்றலைத் தரும். பலவகைகளில் சேமிப்பீர்கள். தோழிகளால் புகழ் கிடைக்கும்.

மாணவ மணிகள்: உயர்க்கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் நன்மையுண்டு.

சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், பங்குதாரர்களை அனுசரிக்கவும்.

அரசியல்வாதிகள்: நிதானமாக உங்களின் தடங்களை பதித்து முன்னேறுவீர்கள்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். தடைகள் விலகும். வளர்ச்சிக்கு வழிகிடைக்கும். உதவியாளர்களும், உயரதிகாரிகளும் இணக்கமாக இருப்பார்கள். மன கிலேசங்கள் விலகும். கோரிக்கை நிறைவேறும்.

பெண்மணிகள்: சகோதரர்களால் உபகாரம் கிடைக்கும். இளம் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். பிரச்சினைகள், கடன்கள் தீரும்.

மாணவ மணிகள்: மன குழப்பத்தை நீக்க முயற்சி செய்யவும். தெளிவாக முடிவெடுத்து கல்வியில் அதிக கவனம் செலுத்தவும்.

சிறுதொழில், வியாபாரம்: அதிக முதலீடு தவிர்க்கவும். புதிய தொழில், கிளை இப்போது வேண்டாம். அரசு ஆதரவு கிடைக்காது.

அரசியல்வாதிகள்: தலைமையின் கருத்துக்கு ஏற்ப செயல்படவும். நட்பை பலப்படுத்தவும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: பணியிடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்காலத்திட்டம் குறித்து சிந்திப்பீர்கள். அனைவரிடமும் மதிப்பு உயரும். லட்சியம் நிறைவேறும்.

பெண்மணிகள்: கலைகளில் ஆர்வம் ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும். இல்லறத் துணையின் ஆதரவான கருத்தால் உற்சாகம் பெறுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.

மாணவ மணிகள்: கல்விக்குத் தேவையான உதவித் தொகை தாமதமாக கிடைக்கும். அரசு ஆதரவைப் பெற சற்று சிரமம் ஏற்படும். நட்பை வளர்த்துக் கொள்ளவும்.

சிறுதொழில், வியாபாரம்: வங்கி ஆதரவைப் பெற சற்று தாமதம் ஆகலாம். ஊழியர்களின் உழைப்பை சரிவர பயன்படுத்தவும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் கருத்தை ஆதரித்து செயலாற்றவும். நன்மைகள் கிடைக்க தொண்டர்களை ஆதரிக்கவும்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு அதிகரிக்கும். புதுவீடு கட்டும் எண்ணத்திற்கு ஏற்ப வசதி வாய்ப்பு ஏற்படும். பதவி உயர்வு, அந்தஸ்து உயர்வு ஏற்படும் நண்பர்கள் உதவி செய்வார்கள்.

பெண்மணிகள்: இளம் பெண்களின் திருமணப் பேச்சு நடைபெறும். உறவினர்களின் உதவி நாடி வரும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வீர்கள்.

மாணவ மணிகள்: பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வேடிக்கை விவாதங்களில் பங்கு பெறுவீர்கள். ஆசிரியரின் கண்டிப்பான அறிவுரையை ஏற்று செயல்படுத்தவும்.

சிறுதொழில், வியாபாரம்: தனலாபம் அதிகரிக்கும். சாதனைகள் புரிவீர்கள். சமூக அந்தஸ்து உயரும்.

அரசியல்வாதிகள்: தேசிய கட்சியினருக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: உயர் பதவிக்காக முயற்சியில் வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். வேற்றுமொழிக்காரர்களால் உதவி கிட்டும். மதிப்பு, மரியாதை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

பெண்மணிகள்: பிறந்த வீட்டு உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும். தோழிகளின் செயல்களினால் மனவேதனை அடைவீர்கள். பொறுமையைக் காத்தால் நல்லது.

மாணவ மணிகள்: வெகுநாட்களாக நிறைவேறாத உயர்க்கல்வி கிடைக்கும். தனித்திறன் பயிற்சி பெற்று உற்சாகம் அடைவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: பொருளாதார நிலை உயரும். பங்குதாரர்களில் சிலரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். புதிய நட்பால் பலம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அசையா சொத்துகள் வாங்கலாம். அதிருஷ்ட வாய்ப்புகளை தவற விடாதீர்கள். பெரிய பதவி கிடைக்க காத்திருக்கவும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: சிலர் விலகிச் செல்வது நன்மையேத் தரும். உயரதிகாரிகளின் ஆதரவால் புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்களின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் இணக்கம் மகிழ்ச்சியைத் தரும். பொருளாதாரம் உயரும். இளம் பெண்களுக்கு திருமணப் பேச்சு நடைபெறும். ஆன்மிக சிந்தனை வலுப்படும்.

மாணவமணிகள்: கடுமையான உங்களின் உழைப்புக்கேற்ற மதிப்பெண் அதிகரிக்கும். நேர்முகத் தேர்வுகளில் சிலருக்கு வேலையும் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பிரச்சினைகள் தீரும். கொள்முதலில் நேரடியான பார்வை தேவை. தொழிலாளர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள்: மேலிடத்தை அனுசரித்து செல்லவும். மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி உதவி செய்யுங்கள்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: சக பணியாளர்களில் சிலர் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பதவி உயர்வும், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். சலுகைகளைப் பெறுவீர்கள். கடன்கள் தீரும். நிம்மதி கிடைக்கும்.

பெண்மணிகள்: வாரிசுகளால் மகிழ்ச்சி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சிக்கலான பிரச்சினைகளில் சுயமுடிவு நன்மைத் தரும்.

மாணவ மணிகள்: தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். வாக்குவாதம் தவிர்க்கவும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய ஊழியர்களை தரம் அறிந்து சேர்ப்பீர்கள். வாகனங்கள் வாங்கி, வளர்ச்சிக்கு பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கை உயர்த்த முயற்சி செய்யவும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: எதிர்பாராத வகையில் ஊக்கத்தொகை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். எவருக்கும் ஜாமீன் தரக்கூடாது. கடன் பெறுவதிலும், வாங்குவதிலும் எச்சரிக்கை தேவை.

பெண்மணிகள்: எந்த விஷயத்திலும் இல்லறத் துணையின் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். பிறந்த வீட்டு உறவுகளை அரவணைத்துச் செல்லவும். நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்குவதைத் தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: நண்பர்களிடத்தில் சச்சரவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். சிலரின் நட்பை விட்டு விலகுவது நல்லது. கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: வங்கி, அரசு நிறுவனங்களின் நிதி உதவி கிடைக்கும். தேவைக்கு அதிகமான செலவுகளைத் தவிர்க்கவும். தகுதியான ஊழியர்களை பணியில் அமர்த்தவும்.

அரசியல்வாதிகள்: நேர்மையானவர்ளுடன் பழகவும். சக கட்சியினரிடத்திலும் ரகசியம் பகிர வேண்டாம்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உயரதிகாரிகளின் ஆதரவுடன் நற்பெயரைப் பெறுவீர்கள். சிலருக்கு தற்காலிக பதவி உயர்வு கிடைக்கும். திறமையுடனும் சாமர்த்தியத்துடனும் திகழ்வீர்கள்.

பெண்மணிகள்: ஆபரணச் சேர்க்கை உண்டு. பிறந்த வீட்டு ஆதரவும் கிடைக்கும். சகோதரர் வழியில் இணக்கமாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை ஒத்திப்போடுங்கள். இளம் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

மாணவ மணிகள்: புதிய நண்பர்களுடன் ஏற்படும் நட்பு. நன்மையைத் தரும். புதிய மொழிகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். தொழிலை விரிவு செய்வதை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள்: சச்சரவுகளைத் தவிர்க்கவும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: எதையும் சாதிக்கும் திறனும் சாமர்த்தியமும் பெறுவீர்கள். வாக்கு வன்மையால் வசதிகள் அதிகரிக்கும். பல வகைகளில் தன விருத்தி சக பணியாளர்களின் உதவியும் பெறுவீர்கள்.

பெண்மணிகள்: குடும்பத்திலும், அக்கம்பக்கத்திலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். உறவினர் வழியிலும் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. திருமண நாளை இளம் பெண்கள் எண்ணி வருவார்கள்.

மாணவ மணிகள்: கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனை கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்கள் வாடிக்கையாளர்களிடம் இனிமையாக பழகவும். கடன் தவிர்க்கவும். நிலுவைத் தொகையை வசூலிக்கவும்.

அரசியல்வாதிகள்: பொதுவாக சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். தலைமையிடம் கட்சி விவகாரங்களை கொண்டு செல்ல வேண்டாம்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உயரதிகாரிகளின் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கவும். உயர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டலாம் என்பதால் அனைவரிடமும் அமைதியுடன் பழகவும்.

பெண்மணிகள்: வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி அலங்கரிப்பீர்கள். வாசனை திரவியங்கள் அழகு பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மாணவ மணிகள்: வெகு நாட்களாக எதிர்பார்த்த வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில், சிறப்பும், கணிதத்தில் திறனும் பெறுவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: ஊழியர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் கண்காணிக்கவும். உயர்ந்த பொருட்கள், ஆவணங்களைப் பாதுகாக்கவும்.

அரசியல்வாதிகள்: கடமை உணர்வுடன் பணியாற்றவும். பாராட்டும், பரிசும் கிடைக்கும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: பொருளாதார வசதிகள் தொடர்ந்து கிடைக்கும். உபரி வருமானமும் உண்டு. சலுகைகளைப் பெற்று சாதிப்பீர்கள். பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். நிதானமாக சிந்தித்து செயல்படவும்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் ஆதரவுடன் சில பணிகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடைவீர்கள். விருந்து விசேஷங்களில் முதன்மையாக இருப்பீர்கள்.

மாணவ மணிகள்: விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வேலையும் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: சில சங்கடமான சம்பவங்களை சந்திக்க நேரிடலாம். அதே சமயம் வாக்கு சாதுர்யத்தால் வளர்ச்சிக்குத் தடை ஏற்படாது.

அரசியல்வாதிகள்: சக கட்சியினரிடத்திலும், எதிர் கட்சியினரிடத்திலும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சற்று பொறுமை காக்கவும். புகழ் கிடைக்கும்.