ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தால், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் “தற்சார்பு” (ஸ்வ) என்ற கருத்து, உலகளாவிய நெருக்கடி காலத்தில் மிகவும் பொருத்தமானதாகிறது. புவிசார் அரசியல் தருணங்களில் பனிப்போரின் முடிவுக்குப் பிறகு, நிச்சயமற்ற தருணங்களில் நீடித்த ரஷ்யா -− உக்ரைன் போர் முதல் மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் பதட்டங்கள், உலக வல்லரசுகளுக்கு இடையேயான பொருளாதாரப் போர் வரை, சர்வதேச அரசியல் ஒரு நிலையற்ற கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
தற்சார்பு என்பது தனிப்பட்ட அர்த்தத்தில் நாகரிக சுயத்தை குறிக்கிறது. அதாவது ஒரு தேசம் தனது அடையாளம், விழுமியங்கள், கலாச்சார தொடர்ச்சி, அறிவுசார் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை குறிக்கிறது. ஒரு சமூகம் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், வெளி சக்திகள் சார்ந்து இருந்தால் அரசியல் சுதந்திரம் மட்டும் போதாது, இந்த வேறுபாடு “ஸ்வதினதா” மற்றும் “ஸ்வதந்திரத்தா” ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டின் மீதான வலியுறுத்தல்.
‘ஸ்வதினதா’- என்பது ஒரு ஆழமான சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. 1947ல் நடைபெற்ற அரசியல் சுதந்திரத்தைக் குறிக்கிறது. காலனி ஆதிக்கத்திலிருந்து அறிவுசார் விடுதலை பாரதிய சுயாட்சி, கலாச்சார நம்பிக்கை, பொருளாதார திறன் மற்றும் நாகரிக சுய விழிப்புணர்வு, இன்றைய உலகில் இந்த வேறுபாடு முன்னெப்போதையும் விட, முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையே மாற்றி அமைக்கும் பரிமாணங்களான ‘பஞ்ச பரிவர்த்தன்’ பற்றி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் பேசி வருகிறது.
அதேபோல் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள், உலகளாவிய எரிசக்தி வளைய அமைப்புகளின் பலவீனத்தை வெளிப்படுத்தி உள்ளன. ஹோர்முஸ் நிலை உலகளாவிய எண்ணை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் வழியாகவே செல்கிறது. ஈரான் வளைகுடா நாடுகள் மேற்கத்திய ராணுவ சக்திகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பதற்ற அதிகரிப்பும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது.
இந்த நெருக்கடி பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, நாகரீக ரீதியானதும் ஆகும். பல மேற்கத்திய சமூகங்களில் சமூகப் பிளவு, தனிமை, சிதைந்து வரும் குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சித்தாந்த தீவிரவாதம் ஆகியவை ஆழமான உள்நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் பொருள் வளத்தை கொண்டு வந்திருந்தாலும், பல சமூகங்கள் ஆன்மீக வெறுமை மற்றும் சமூக அந்நிய சக்திகளுடன் தொடர்ந்து போராடி வருகின்றன.
பாரதிய சமுதாய கருத்தானது “வசுதைவ குடும்பகம்”, அதாவது ‘உலகம் ஒரு குடும்பம்’. இது போன்ற கருத்து வெறும் கோஷங்கள் அல்ல, மாறாக மனித குலத்தை ஆதிக்க கண்ணோட்டத்திற்கு பதிலாக, சக வாழ்வின் கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு நாகரிக நிலையின் பிரதிபலிப்பாகும்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது அகில பாரத தலைவரான ஸ்ரீகுருஜி ஒரு முறை குறிப்பிட்டார், “ஸர்வே பவந்து, ஸூகினஹ ஸர்வே ஸந்து நிராமயா” (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் எல்லா தீமைகளிலிருந்தும் விடுபட்டு இருக்கட்டும்).
கோவிட்-19 பெருந்தொற்று உலகளாவிய அமைப்புகளை அதீதமாக சார்ந்து இருப்பதன் ஆபத்துகளை மேலும் வெளிப்படுத்தியது. சக்தி வாய்ந்த நாடுகள்கூட, மருத்துவப் பொருட்கள், தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களை பெறுவதற்கு போராடின. பாரதத்தின் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி திறன், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தி திறன்கள் இந்த நெருக்கடியின் போது முக்கிய பலன்களாக மாறின.
உலகளாவிய சார்பு நிலையைவிட, தேசிய திறனே முக்கியமானது என்பதை இந்த பெருந்தொற்று உலகிற்கு நினைவூட்டியது. ஆயினும் “தற்சார்பு” என்பது தனிமைவாதம் அல்ல. பாரதத்தின் நாகரிக தத்துவம் ஒருபோதும் உலகிலிருந்து விலகுவதை ஊக்குவித்ததில்லை. வரலாற்று ரீதியாக, பாரதம் தனது சொந்த நாகரிக மையத்தை தக்க வைத்துக் கொண்டே உலகளாவிய வர்த்தகம், அறிவுசார் பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார தொடர்புகளில் ஆழமாக ஈடுபட்டது.
புவிசார் அரசியல் மோதல்கள், சீர்குலைவுகள் மற்றும் கருத்தியல் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்புள்ள ஒரு காலகட்டத்திற்கு உலகம் நுழைகிறது. ரஷ்யா -− உக்ரைன் போர், ஹோர்முஸ் நெருக்கடி, மேற்கு ஆசியாவில் நிலவும் ஸ்திரத்தன்மை அனைத்தும் உலகளாவிய ஸ்திரத்தன்மையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
நிச்சயமற்ற இந்த யுகத்தில் ‘தற்சார்பு’ என்பது வெறும் தத்துவார்த்த லட்சியம் மட்டும் அல்ல, அது பாரதத்தின் எதிர்காலத்திற்கான ஒரு அத்தியாவசிய தேவையாகும்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்