ராணுவ தடகளத்தில் 3 தங்கம் வென்றவர்க்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயா. கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் ஆனந்தன்(32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த மாதம் சீனாவில் நடை பெற்ற ராணுவ வீரர்களுக்கான உலக தடகளப் போட்டியில் பாரா பிரிவில் பங்கேற்ற ஆனந்தன் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் வென்று அசத்தினார் குணசேகரன் ஆனந்தன்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு நேற்று வந்த ஆனந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்களுடன் அவர் படித்த நேட்டிவ் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு மரியாதி செய்யப்பட்டது.

ஆனந்தன் கூறுகையில், “2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் என்னுடைய அடுத்த இலக்கு, நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.