ஒரு தேசிய கட்சி, அதுவும் பிரதான எதிர் கட்சியான காங்கிரஸின் தலைவர், பிரதம மந்திரி வேட்பாளராக பார்க்கப்படுபவர் ராகுல்காந்தி. இவர் சிறிதும் பொறுப்பில்லாமல் அடிக்கடி இத்தாலிக்கு திடீர் விடுமுறையில் செல்வது வாடிக்கைதான். அதுவும் கொரோனா இரண்டாவது அலை வீசும் இன்றைய சூழலில், ஐரோப்பா நாடுகளுக்கு மருத்துவ, படிப்பு, அவசர தேவை காரணங்களுக்காக மட்டுமே செல்லலாம் எனும் சூழலில் ராகுல் இத்தாலிக்கு சென்றிருக்கிறார். மேலும் டிசம்பர் 27ல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் வரவுள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராகுலின் தொகுதியான, வயநாட்டில் செயல்திறன் மதிப்பாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ராகுலின் உல்லாச விடுமுறை சொந்த கட்சியினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையே எடுக்காமல் தினமும் 18 மணி நேரம் உழைக்கும் பிரதமர் மோடி எங்கே, இப்படி சிறுபிள்ளைதனமாக நடக்கும் ராகுல் எங்கே என பொதுமக்களே பேச துவங்கிவிட்டனர்.