கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முஸ்லிம் கலவரக்காரர்களிடமிருந்து பொது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடு வசூலிக்கப்படும் அல்லது அவர்களின் சொத்திலிருந்து இழப்பீடு மீட்கப்படும் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
காவல்துறையினர் இதுவரை 145 முஸ்லிம் வன்முறையாளர்களை கைது செய்துள்ளனர். மேலும் பட்டியல் இன காங்கிரஸ் எம்.எல்.ஏவான அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, டி.ஜே.ஹல்லி காவல் நிலையம், தீயணைப்பு வாகனம் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றவர்களையும் அடையாளம் கண்டுள்ளனர். அரசாங்கம் ஏற்கனவே மொத்த இழப்புகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தால் செய்யப்பட்டதைப் போல இந்த முஸ்லிம் வன்முறையாளர்களிடம் இருந்து சேதத்திற்கான மொத்த செலவையும் மீட்க வேண்டும் என்று இந்து அமைப்புகளின் பல தலைவர்கள் கோரினர். பெங்களூரு தெற்குப் பகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யாவும் இதே கருத்தினை வலியுறுத்தி முதல்வர் எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். 2019 ஆம் ஆண்டு சிஏஏ எதிர்ப்பு கலவரத்தின்போது உத்தரபிரதேசத்தில் நடந்ததைப் போலவே கலவரக்காரர்களும் பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் என்று மாநில அமைச்சரவை அமைச்சர் சி.டி. ரவி தெரிவித்திருந்தார்.