கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், சுமார் 1,000 கோடி சொத்துக்கள் சம்பந்தமான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், குஜராத் அரசின் வனத்துறையின் சின்னத்தை, தன் ‘சீஷா’ (கல்வி, சுற்றுச்சூழல், சமூக மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கான சமிதி)க்கு முறைகேடாக தினகரன் பயன்படுத்தியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள குஜராத் வனத்துறை, சீஷாவுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது குறித்து விசாரித்து அவர் மீது சட்டப்படி வழக்கு தொடர்வோம் என கூறியுள்ளது.