சுவாமி விவேகானந்தரை கிறிஸ்தவராக மதம் மாற்றிவிட்டால் அதன் மூலம் ஏராளமான ஹிந்துக்களை மதம் மாற்றிவிடலாம் என்ற நப்பாசையில் கிறிஸ்தவ அமைப்புகள் அதற்கான திட்டங்களை வகுத்தன. அதன் தொடர்ச்சியாக இரண்டு கிறிஸ்தவ பாதிரிகளை சுவாமிஜியை சந்திப்பதற்காக அனுப்பி வைத்தன.
அப்போது சுவாமிஜி பேலூர் மடத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.
மடத்து நிர்வாகி அந்த கிறிஸ்தவ பாதிரிகளை சுவாமிஜி தங்கியிருந்த அறைக்கு அனுப்பி வைத்தார். அதுவரை தியானத்தில் இருந்த சுவாமிஜி மெதுவாக கண்களைத் திறந்து, புன்னகைத்து வந்தவர்களை உற்று நோக்கினார். சுவாமிஜியின் முகத்திலிருந்து வீசிய ஒளியைப் பார்த்த பாதிரிகள் இருவரும் கைகூப்பி அவரைத் தொழுதனர்.
பாதிரி ஒருவர் சுவாமிஜியிடம் பணிவோடு, ஐயா, சத்தியத்தை எங்கே தரிசிக்கலாம்?” என்று கேட்டார். சுவாமிஜி, சத்தியம் ஏற்கனவே உங்களிடத்தில் தான் உள்ளது. கவனத்தை உள்ளே திருப்புங்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் கண்களை மூடி தியானத்தில் மூழ்கிவிட்டார். பாதிரிகள் இருவரும் வந்த நோக்கத்தை மறந்தனர். சுவாமிஜியின் ஆன்மிக சக்தியின் உண்மையான புனிதக் காற்றை சுவாசித்தனர். மாற்ற வந்தவர்கள் மாறினர். அத்தோடு கிறிஸ்தவ மதத்திற்கு முழுக்குப் போட்டனர். ஹிந்துக்களாக மதம் மாறினர். இமயமலை சென்று, தவ வாழ்க்கையில் ஈடுபட்டு, அங்கேயே தங்களது வாழ்க்கையை தொண்டுப் பணிகளுக்காக அர்ப்பணித்தனர்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்