சித்த மருத்துவம் 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சித்தர்கள் 38,000 கோடி பூக்களை கண்டு பிடித்தனர். ஒவ்வொரு பூவின் பின்னும் ஒரு மகான் அல்லது சரித்திரம் உள்ளது. அப்பூக்களால் சித்தர்களின் சித்தியான மருத்துவப் பயன்களும் மிகுந்துள்ளது.
டூ தம்பதியர் மல்லிகைத் தோட்டத்தில் உலவினால் குழந்தைப் பேறு கிடைக்கும்.
டூ திருமணம், திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு, கௌரவப்படுத்தல், கடவுளர் வழிபாடு, சவ ஊர்வலம் முதலியவற்றில் பூக்கள் பங்கு பெறுகின்றன.
பவளமல்லி பூ வாசம் ஞானம் அள்ளிக்கவல்லது என்பதால் வாயு புத்திரன் இதன் நிழலில் தவம் செய்தான் என்பதும் வியத்தகு விஷயம்.
ஒரு பூவின் முதன்மை நோக்கம் தாவரத்தின் இனப் பெருக்கம்.
அனிமோ ஃபிலஸ் மலர்கள் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு மகரந்தங்களை மாற்ற காற்றைப் பயன்படுத்துகின்றன.
சில ஆர்ச்சிட்டுகளின் தாவர வகைகள் நிறம், வடிவம், வாசனையால் தேனீக்களை ஈர்க்கக்கூடிய பூக்களை உற்பத்தி செய்கின்றன.
425 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நீர்சார் இணைகளான வித்துக்களிடமிருந்து இனப்பெருக்கம் செய்தன என்பதெல்லாம் பிரம்மிப்பான விஷயங்கள்.
நம் முன்னோர்கள் குறிஞ்சிப்பூ பூப்பதைக் கொண்டு வயதையும் ஆவராம்பூ பூப்பதை கொண்டு தைபிறந்த காலத்தையும் பூக்கள் மலர்வதைக் கொண்டு நேரத்தையும் அறிந்துள்ளனர்.
செங்கமலம், எனும் நீர் தாவரப்பூ மலர்ந்தால் அதிகாலை, ஆம்பல் வாடினால் சூரிய தாமரை மலர்ந்தால் காலை, வேங்கை மலர்ந்தால் நண்பகல், மல்லிகை, முல்லை அந்திமந்தாரை மலர்ந்தால் மாலை நேரம், நாறி என்ற மலர் மலர்ந்தால் நள்ளிரவு என்பதை அறிந்து கொண்டனர். அதுமட்டுமா?
வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, காந்தள்பூ அடங்கிய மலை சூழ்ந்த இடம் குறிஞ்சி எனவும் குரோம்பூ, மராம்பூ எனும் பூக்கள் உள்ள இயற்கை சீற்றத்தால் உருக்குலைந்த இடம் பாலை எனவும் குல்லை, முல்லை ஆகிய பூக்கள் உள்ள குறிஞ்சி – மருதம் இடையே உள்ள பகுதி முல்லை எனவும் தாமரை, கழுநீர், குவளை பூக்களின் பகுதி மருதம் எனவும் நெய்தற்பூ, தாழம்பூ, முண்டகப்பூ, அடம்பம் பூ மலரும் பகுதி நெய்தல் எனவும் பூக்களை கொண்டே நிலத்தை 5 வகையாகப் பிரித்துள்ளனர்.
பூக்களின் பயன் எண்ணற்றவை. மருந்தாகவும் விருந்தாகவும் ஆன்மிக ரீதியாகவும் அளவுகடந்த பயன் தருகின்றன.
மன அலைச்சல் – ஹிஸ்யரியா நோய் – உள்ள பெண்கள் மருதாணிப் பூவை சூடினால் நோய் அகன்றுவிடும், இலுப்பை பூ கஷாயம் அருந்த, ஆண்மை மிகும், தொட்டாச்சிணுங்கி புற்றுநோய் போக்கும், எருக்கம் பூ குஷ்டம் நீக்கும், அல்லிப்பூ சர்பத் நீரிழிவை குணமாக்கும், அவாரைப்பூ சூரணம் தினம் உண்ண ஆயுள் விருத்தியடையும், நாகலிங்கப்பூ தாம்பத்ய உறவை மேம்படுத்தும். இப்படி ஏராளமான மருத்துவ மகத்துவம் கொண்டவை பூக்கள்.
பூக்கள் காரிய சித்திக்கு வழி தருகின்றன. மகிழம்பூ எதிரி தொல்லை அகற்றும்.
பூவினை ஜடை முழுவதும் சுற்றி அலங்கரிப்பதால் குறை பிரசவம் தவிர்க்கும். நந்தியாவட்டை பூவை காதில் வைத்தால் கண் நரம்புகள் சீராகி கண் வலியை குணமாக்கும். இதுபோன்ற ஆயிரக்கணக்கான, வகையில் பூக்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.
***********************
சந்திரபகவான் தீக்கற்களிடையே நின்று பலகாலம் தவம் செய்தார். தேவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அவர் முன் திடீரென தீப்பிழம்பு தோன்றி 16 ஆக பிரிந்தது. ஒவ்வொரு பிழம்பும் ஒவ்வொரு வேலையைச் செய்தது. ஒரு பிழம்பு கற்களை குளிர வைக்க, மற்றொரு பிழம்பு தாவரங்களை வளர்க்க, அடுத்தது அத்தாவரங்களுக்கு உயிரூட்ட, கடைசிப் பிழம்பு அம்பிகை வடிவெடுத்தது. சந்திரபகவான் அம்பிகையை வணங்கினார். அவர் கைகளில் அமிர்த தாரகைகளை அம்பிகை தந்தாள். அதை உண்ணும்போது பல துளிகள் தெரித்தன. அவைகளிலிருந்து பிறந்ததே பூக்கள் என்பது அகஸ்தியரின் வாக்கு.
***********************
Good