மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிர்ப்பு

கர்நாடக அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான விவாதத்தில் ஈடுபட்டுள்ளது கிறிஸ்தவ மிஷனரிகளை கவலையடையச் செய்துள்ளன. இதனை எதிர்த்து கர்நாடக கத்தோலிக்க ஆயர்கள், பீட்டர் மச்சாடோ லைமையில் கர்நாடக முதல்வர் பசவ்ராஜ் பொம்மையை சந்தித்து மனு அளித்தனர். தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை என்றும், இந்த சட்டம் தேவையற்ற வகுப்புவாத பிரச்சனைகள், அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினர்.

மேலும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்த உருவாக்கப்பட்ட குழுக்களில் கிறிஸ்தவ நிர்வாக பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தாங்கள் மதமாற்றம் செய்வதில்லை என்றால் பின்னர் ஏன் மதமாற்றத் தடுப்பு சட்டத்தை இவர்கள் எதிர்க்க வேண்டும், கேரளாவில் முஸ்லிம்கள் நடத்தும் லவ் ஜிஹாத், போதைப்பொருள் ஜிஹாத் குறித்து அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகளே கவலை தெரிவித்துள்ள சூழலில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.