மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் இம்முறையும் முதல்வராக பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், பா.ஜ., சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ம.பி., முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (டிச.,11) நடைபெற்ற பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் ஒருமனதாக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏ.,வான இவர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.