பாமக போராட்டம்; இழந்த செல்வாக்கை மீட்கவா?

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியருக்கான 20 சதவித இட ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. . ஒரு பக்கம் பா ஜ கவை முதலில் அழைத்து முந்தைய கூட்டணியுடன் தமிழக தேர்தலை சந்திப்போம் என்று முதல்வர் அறிவித்துவிட்ட நிலையில் அ தி மு க தனது கூட்டணியில்  முதன்மை கட்சி என்ற இடத்தை பா ஜ க பெற்று விட்டதே என்ற ஏமாற்றத்தாலும் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதோ என்று சந்தேகப்பட வைக்கிறது.

தந்தை மகன் என்று தனது குடும்பத்தையே முதன்மையாக கொண்டு கருணாநிதியை போன்றே செயல்படும் மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் புதிதாக  எதையும் தனது ஜாதி மக்களுக்காக செய்து விடவில்லை. மாறாக,  முதன்முறையாக சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த காலத்தில் பல ஊழல் புகாரைத்தான் சம்பாதித்து வைத்துள்ளது

உயிர் காக்கும் அவசர ஊர்தியை கொண்டு வந்ததாக மார்தட்டும் பாமக கூட்டம் தனது போராட்டத்தில் அவசர ஊர்திக்கு கூட வழிவிட முனையவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முன்பு எம்ஜிஆர் ஆட்சியின் போது அரசை பணிய வைக்க ஒரு மாதகால தொடர் போராட்டம் செய்த பாமக, தற்போது அதனை போன்றதொரு அரசை முடக்கும் போராட்டத்தை செய்யத்தான் முதலில் நினைத்திருந்தது, பின்னர் அப்படியொரு போராட்டத்தை நடத்தினால் கட்சியினரின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும். அது கட்சியை மேலும் பலகீனமாக்கும்  என்பதனை உணர்ந்து திட்டத்தை மாற்றியது. சாலை மறியல் ,ரயில் மறியல் என்று அரைமணி நேரம் போராடிவிட்டு பாமகவின் இளைய தலைவர் முதல்வரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்து போராட்டத்தை  முடித்து கொண்டார். முன்னரே பாமகவின் பொதுக்குழுவில் இந்தப் போராட்டம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது .தற்போது அது ஒருநாள் கூத்தாக ஆகிவிட்டது.

இந்த அதிரடிப் போராட்டம் யாரை ஏமாற்ற, அல்லது யாரை கவருவதற்காக என்பது புரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  கவனத்தை ஈர்ப்பதற்கும் நானும் இருக்கிறேன் என்று கூட்டணியில் தனது இருப்பை காட்டி கொள்வதற்குமா? அல்லது எப்போதும் போல நான்தான் பெரியகட்சி எனக்கு அதிக சீட்டு என்று கூட்டணியில் பேரம் பேசி அடம்பிடிக்கவா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்கும் தனது கட்சியின் செல்வாக்கை  தூக்கி நிறுத்தும் வேலையா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிய வரும். .

One thought on “பாமக போராட்டம்; இழந்த செல்வாக்கை மீட்கவா?

  1. மஜுரிட்டி ஹிந்து வளர்ச்சி இல்லை, அதே போன்று பெரும்பான்மை வன்னிய சமூகம் ஒதுக்கப்படும்போது வளர்ச்சி இல்லை ,,,,இடஒதுக்கீடு தானே கேட்கிறீர்கள்

Comments are closed.