1971ல் நடைபெற்ற பாரத பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தான் அன்றைய கிழக்கு பாகிஸ்தானான வங்காளத்தில் உள்ள பொதுமக்கள் மீது ‘ஆபரேஷன் சர்ச் லைட்’ எனும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி லட்சக்கணக்கானோரை கொன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அநாகரீக செயலுக்கு பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறி, சில நாட்களுக்கு முன், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர்.