பல்கலை வளாகத்தில் ‘இடது’ இடக்கு சீன அடிவருடிகளின் திட்டம் அம்பலம்!

சில தினங்களுக்கு முன் ‘டெல்லி ஸ்டூடன்ட்ஸ் யூனியன்’ (டிஎஸ்யு) என்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர், 2001-ல் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட பயங்கரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதையும், காஷ்மீரில் காவல் துறை அதிகாரியை படுகொலை செத மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டதையும் எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். இத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் கலாசார விழா நடத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, அப்சல்குருவை காஷ்மீர் ஹீரோவாகவும் தியாகியாகவும் சித்தரிக்கும் ஆவணப் படம் ஒன்றைத் திரையிட முயன்றிருக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் ஆவணப்படத்தின் விவரமறிந்து அதைத் திரையிட அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினருக்கும் டி.எஸ்.யு.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, டி.எஸ்.யு மாணவர்கள் துப்பாக்கியை காட்டி ஏ.பி.வி.பி. மாணவர்களை மிரட்டியதாக சோல்லப்படுகிறது. ஏ.பி.வி.பி. மாணவர்கள் போலீசில் புகார் கொடுத்ததுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு எழுத்து மூலம் புகார் அனுப்பியுள்ளார்கள். அனுப்பபட்ட புகார் மனுவின் மீது டெல்லி காவல் துறையினர் உரிய நடவடிக்கையாக மாணவர் சங்க தலைவர் உட்பட்ட சிலர் மீது வழக்கு தொடுத்தது.

டி.எஸ்.யு மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில், இவர்களின் கோஷங்கள் எவ்வாறு இருந்தது என்பதையும் கவனிக்க வெண்டும். ’எணி ஞச்ஞிடு ஐணஞீடிச்.’ ’ஓச்ண்டட்டிணூ டுடி அத்ச்ஞீடி ணாச்டு ஒதணஞ் கீச்டஞுஞ்டி, ஒதணஞ் கீச்டஞுஞ்டி.’ ’ஆடச்ணூச்ணா டுடி ஆச்ணூஞச்ஞீடி ணாச்டு ஒதணஞ் கீச்டஞுஞ்டி   ஒதணஞ் கீஞுடஞுஞ்டி.’ ‘அல்லா ஹு அக்பர்’ என்றும் கோஷமிட்டுள்ளார்கள்.   ‘அஞூத்ச்டூ தீஞு ச்ணூஞு ச்ண்டச்ட்ஞுஞீ ணாடச்ணா தூணிதணூ ட்தணூஞீஞுணூஞுணூண் ச்ணூஞு ண்ணாடிடூடூ ச்டூடிதிஞு.   ஆடச்ணூச்ணா தீjnuடிடூடூ ஞஞு ஞீஞுண்ணாணூணிதூஞுஞீ ( ண்ணீடூடிணணாஞுணூஞுஞீ ) ஞதூ ணாடஞு தீடிடூடூ ணிஞூ அடூடூச்ட.‘   (அப்சல், உன்னை கொன்றவர்கள் இன்றும் உயிருடன்! அல்லா ஆணையால் இந்தியா சிதறும்) போன்ற கோஷங்கள் சரியானதா என்பதை கூட சிந்திக்க மறுக்கும் இடதுசாரிகளை என்னவென்று கூறுவது? டி.எஸ்.யு மாணவர் அமைப்பில்.

பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் வீரர் விரா கோலியின் ரசிகரான ஒரு பாகிஸ்தானியர் இந்தியக் கொடியை பறக்க விட்டதற்காக விசாரணையின்றி 10 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். 2010-ல் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் தண்டவதே பகுதியில் 76 மத்திய ரிசர்வ் காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள நர்மதா ஹாஸ்டலில் தங்கியிருந்த டி.எஸ்.யு. மாணவர்கள் பாட்டு பாடி கொண்டாடியதையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் இந்தியாவை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இந்தியாவில் ஓலமிடும் ஓநாகளுக்கு சந்தனம் பூசி சாந்துப் பொட்டு வைத்து வழிபட வேண்டுமா?

இதன் காரணமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் கைது செயப்பட்டார். அவருடன் சில மாணவர்களும் கைது செயப்பட்டார்கள், சிலர் தலைமைறைவாக இருக்கிறார்கள். அவ்வாறு தலைமறைவாக இருப்பவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பியும் தேசிய செயலாளருமான டி.ராஜாவின் மகளும் ஒருவர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் டி.எஸ்.யு மாணவர் அமைப்பு மக்பூல் பட்டுக்கு நினைவு அஞ்சலி நடத்தியது. 1971 ஜனவரி மாதம் 30 தேதி – ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்கு சென்ற விமானத்தை கடத்திய மக்பூல் பட், கடத்தப்படட விமானத்தை தீ வைத்து எரித்தவன். 1984-ல் அமர்சந்த் என்ற போலீஸ் அதிகாரியை கடத்தி படுகொலை செதவன், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 3ந் தேதி இங்கிலாந்தில் இருந்த இந்திய தூதர் கீச்திடிணஞீணூச் –டச்ணாணூஞு என்பவரையும் கடத்தி கொலை செதவன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் கன்னையா குமார் உள்ளிட்ட 60 – 70 மாணவர்கள் இஞுணணாணூஞு ஞூணிணூ கணிடூடிஞிதூ அணச்டூதூண்டிண்   என்ற அமைப்பின் பொறுப்பாளர் சீமா முஸ்தபா மூலம் காஷ்மீரில் சுற்றுப் பயணம் செதபோது பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார்கள். அத்துடன் காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர்களையும் சந்தித்தார்கள்.

கன்னையா குமார் கைது செயப்பட்டவுடன், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஜிலானி, காஷ்மீர் தனிநாடு என்று பேசுவது எப்படி தேச துரோகம்? என்று அறிக்கை விட்டார்.

அப்சல் குரு, மக்பூல்பட் ஆகிய இரு பயங்கரவாதிகளுக்காக பல்கலைக் கழக மாணவர்கள் போராடுவதோ அல்லது போற்றிப் புகழ் பாடுவதோதான் ஜனநாயகம், பேச்சுரிமை, சகிப்புத்தன்மை என்றால் அவை எல்லாம் இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் தருவது என்ற வகையில், இந்தியாவை தூண்டாட நினைக்கும் துரோகிகளுடன் கைகோர்க்கும் அரசியல் கட்சி தலைவர்களையும் கைது செய வேண்டும். போராடும் மாணவர்கள் காஷ்மீருக்கு சுதந்திரம் கேட்கிறார்கள், மாணவர்களுக்கும் காஷ்மீர் சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதே தெரியவில்லை. காஷ்மீர் மாநில ஹிந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகாலமாக அகதிகளாக அவதிப்படுவது பற்றி இவர்கள் வா திறப்பதில்லை. இடதுசாரி மாணவர் இயக்கம் பிரிவினையை தூண்டுபவர்களுக்கு மட்டும் வக்காலத்து வாங்குவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

இந்த மாணவர் அமைப்பிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி களம் இறங்கினார்.   12 வருடங்கள் வழக்கு நடந்து 2013-ம் வருடம் பிப்ரவரி மாதம் 9ந் தேதி அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றிய போது ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதை மறந்து விட்டு, ராகுல் காந்தி அப்சல் ஆதரவு மாணவர்களுக்கு தூபம்போடுவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியில் தவறாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதா? என்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும். இடதுசாரிகள் தேச பக்தி என்ன விலை என்று கேட்பவர்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா தனது மகள் தேச விரோத செயலில் ஈடுபடவில்லை என விளக்கம் கூறுகிறார்.

இன்று வரை இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற்றி வாய்திறவாதவர்கள் இவர்கள், அவர்களின் வாலாட்டத்தை ஒடுக்க, வளர்ச்சியை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க உதவாதவர்கள் இடதுசாரிகள். மாவோயிஸ்ட் தலைவர் கோடீஸ்வர ராவ் என்கின்ற கிஷன்ஜி என்பவர் ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எங்களின் முழு ஆதரவும் உண்டு என்று வெளிப்படையாக கூறினார்.

1962-ல் சீனா இந்தியாவின் மீது படையெடுத்து பல ஆயிரம் சதுர கி.மீ தூரத்தை கைப்பற்றியது. சீனாவின் இந்த அடாவடி செயலை கண்டிக்க கூட வக்கில்லாதவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை, சீனா தனது தெற்கு திபெத் என கூறும் போது, அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அடிமைகளாக வா மூடி இருக்கும் இடதுசாரிகள் தேசபக்தியைப் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சீனாவிற்கு சில பகுதிகளை தாரை வார்த்து கொடுத்தபோது கூட அதை தடுக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாதவர்கள். அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சீனாவின் அத்துமீறல்களை ராஜதந்திரம் என வர்ணிக்கும் இடதுசாரிகள் இந்தியாவின் மீது பாச பிணைப்பு இருப்பதாக கூறுவது வேடிக்கையானது.

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதும் பயிற்சி அளிப்பதும் தனது கடமை என சீனா கூறும் போது, டி.ராஜா எங்கே இருந்தார் என்பது தெரியவில்லை. இந்த ராஜா, நக்ஸலைட் இயக்கத்தை இடதுசாரி கம்யூனிஸம் என்றே சோல்லி விடலாம். இது கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் அப்படியே எடுத்துக் கொண்டு இணை பிரியாது அதனுடன் ஒன்றாக வளர்ந்து வந்துள்ள இயக்கம். இந்த இயக்கத்தை சில மாநிலங்கள் தடுத்து, ஒடுக்கி வைத்திருந்த போதிலும், தன்னைப் போட்டு எரிக்கப்பட்ட சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல.” என நக்சல் இயக்கத்திற்கு வக்காலத்து வாங்கியவர்.

தங்கள் கருத்தை முழக்கமிட்டதற்காக மாணவர்களை சிறையில் அடைப்பதா? என்ன நடக்கிறது இங்கே?” என்று சிபிஎம்மின் சீதாராம் யெச்சூரி சீறியதுதான் பயங்கர தமாஷ்!

காஷ்மீர் பிரச்சினையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு ஜே போடுவதுதான். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் காஷ்மீருக்கு தனிச் சலுகைகள் அரசியல் சாஸனத்தில் நுழைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் லாஹிரி, காஷ்மீருக்கு இந்தியாவிலிருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று வாதாடினார்! அரசியல் சாஸன ஷரத்து 370ஐ ரத்து செயக் கூடாது என்பது கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு. வெளிப்படையாகவே கம்யூனிஸ்ட்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் ஆதரித்து வருகிறார்கள்.

 

தேசத்துரோகியை செல்லம் கொஞ்சணுமா?

னது நாட்டில், எனக்குக் கறுப்புக்கொடி காட்ட உரிமையுள்ளது என்பதை நினைக்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது” என்கிறார் ராகுல் காந்தி, இது அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் கறுப்புக்கொடியைக் காட்டுவதற்குப் பதிலாக, அதைக்கொண்டு தேசத்தின் கழுத்தை அல்லவா நெறிக்க முயல்கிறார்கள்? இது எப்படி பெருமைகொள்ள வேண்டிய விஷயமாக முடியும்?

சாதாரண வழக்கைப் போடவேண்டியது தானே, தேசவிரோத வழக்குக்கு என்ன அவசியம் வந்தது” என்றெல்லாம் வினா எழுப்புகின்றன காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள், அப்படி என்றால், அப்சல் குருவை ஆதரிப்பதுதான் தேசப் பற்றா?. இந்தியாவைத் துண்டாடுவோம், என்று கூறுவதுதான் தேசப் பற்றா? ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் ஆதவுரவு கரம் நீட்டுவோம்” என்று பாகிஸ்தானில் இருந்து பெருகிவரும் ஆதரவுக் கரங்கள்தான் தேசபற்றுக்கான சான்றா?

தமிழ்த் தாமரை வி.எம். வெங்கடேஷ்