பக்தி என்றால் என்ன? சுயநல வேண்டுதலா? பொதுநல சேவையா? – –எம். சரத்குமார், செங்கல்பட்டு
இறைவனிடம் தன்னை முழுமையாக சமர்ப்பிப்பதே பக்தி. பொதுநலமே சுயநலமாகக் கொண்டவர்களை கூட, பக்தர்கள் என்று கூறி விடலாம். மற்றவை வியாபாரம்.
ஹிந்து மதத்தில் ஆயிரம் கடவுளர்கள் இருக்கிறார்கள், இதுதான் ஹிந்து மதம் பிரிந்து இருப்பதற்கான காரணமா ? – –எஸ். அசோக், சேலம்
இதுதான் ஹிந்து மதம் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம். ஆபிரகாமிய மதங்கள் போல் இருந்திருக்குமானால், ஹிந்து மதம் என்றோ காணாமல் போயிருக்கும்!
முஸ்லிமாக மாறிய ஹிந்துக்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதே ? – –வி. சுந்தரம், திண்டுக்கல்
அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை ஓட்டு வங்கி அரசியலுக்காக செய்துவிட்டு நீதிமன்றம் சென்றால் என்ன பலன் வருமோ அந்த பலன் வந்திருக்கிறது. நீதிமன்றத்துக்கு பாராட்டுகள்!
இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் அளிக்காமல் வெற்றி பெற்ற தவெக என அண்ணாமலை பாராட்டியுள்ளாரே ? – –பி. மோனிகா, நாகை
இன்னமும் கூட தவெகவின் தவறுகளை கண்டிக்க அண்ணாமலை முன் வரவில்லை. பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் வரை இதை தொடர்வார் என்று தான் எதிர்பார்க்கிறேன். திமுக, அதிமுக எதிர்ப்பு மட்டுமே இப்போதைக்கு போதும் என்று அவர் நம்பலாம்!
நீதித்துறையை மிரட்டி பணிய வைக்க முடியாது என எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி காட்டியுள்ளதே ? -–ஏ.எஸ். பத்மகுமாரி, மயிலாடுதுறை
சபாஷ், தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்! அது மட்டும் அல்ல கரப்பான் கட்சி எதிர்ப்பை மலிவான எதிர்ப்பு என்று வேறு விமர்சனம் செய்திருக்கிறார்கள். பாராட்டலாம்!
திறந்து வைப்பதில் என்ன பெருமை? உருவாக்குவதில்தான் பெருமை என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளாரே? – –எம். அனுசுயா, தூத்துக்குடி
Phase 2 மெட்ரோவை திமுக எப்படி உருவாக்கியது என்று நமக்கு தெரியாதா ? மத்திய அரசின் சாதனை அல்லவா இது! கோவை பெரியார் நூலகத்தை திறந்து வைக்கலாம் என்றால் மக்கள் அந்த வாய்ப்பை வழங்கவில்லை. எனவே இது வெட்டிப் புலம்பல்!
அரிசி விலை உயர்வு, பால் பற்றாக்குறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தவெக ஆட்சியின் அவலங்கள் குறித்து ? – –எல். பேபி, நீலகிரி
ஆட்சியே நடக்கவில்லை, பிறகு எப்படி விமர்சனம் செய்வது!