பாரதியின் வேதாந்த கருத்து பற்றி?
– என். நவீன்குமார், கூடுவாஞ்சேரி
ஒரே வரியில் மிக அற்புதமாக சொல்லியுள்ளாரே… தெய்வம் நீ என்று உணர்” என்கிறார். இதை விட பெரிய வேதாந்தம் எதுவுமில்லை.
தாஜ்மஹால் ஒரு கோயிலாக இருந்தது என்பது உண்மையா?
– கே. அன்புச் செல்வன், விருத்தாச்சலம்
பி.என். ஓக் என்பவர் எழுதிய தாஜ்மஹால் உண்மைக்கதை” (கூச்டீ –ச்டச்டூ அ கூணூதஞு குணாணிணூதூ) என்ற புத்தகத்தில் தாஜ்மஹால் ஹிந்து கோயில் ஒன்றின் மீது எழுப்பப்பட்ட கட்டிடம் என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, ஒரு முகலாய மன்னனுக்கு காதல் உணர்வு இருந்தது என்பது நம்பும்படியாக இல்லை.
ஒரு வீடு சுமுகமாக நடைபெற சிதம்பரம் ஆட்சி அல்லது மதுரை ஆட்சி – இரண்டில் எது சிறந்தது?
– பிரபா நாச்சிமுத்து, பல்லடம்
இரண்டும் அல்ல. திருச்செங்கோடுதான் சிறந்தது. (கேள்வி பதில் புரியவில்லையா? தெரிந்தவர்களிடம் கேளுங்கள்.
பரதனாரே… இன்றைய நாள் நல்ல நாள் என்பதற்கு எது அளவுகோல்?
– வி. மோகன், கொளத்தூர்
காலையில் மலச்சிக்கல் இல்லாமல் துவங்கி இரவில் மனச்சிக்கல் இல்லாமல் தூங்கினால் அன்றைய நாள் நல்ல நாள்.
‘லவ் ஜிகாத்’ ஐ தடுப்பது எப்படி?
– ரமணி தியாகராஜன், கோவை
ஹிந்துப் பெண்களை ஏமாற்றி முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதைத்தான் ‘லவ் ஜிகாத்’ என்கிறோம். சிறு வயதிலிருந்தே எல்லா மதமும் ஒன்று என்று சொல்லிக் கொடுக்காமல் நம்ம மதமே நமக்கு சம்மதம், உயர்ந்தது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். எங்கேயாவது பிச்சை எடுக்கும் ஒரு முஸ்லிமை மதம் மாற்ற முடியுமா? அவனுக்குள்ள மத உணர்வு நமக்கு வேண்டாமா?
ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகள் பற்றி?
– வீர. சுதாகர், கோட்டையூர்
பெத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் எவ்வளவு மன வேதனைப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லையே… அது சரி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் திட்டவே கூடாதா? இதில் காமெடி திருமாவளவன் தான். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு ஒரு கோடி ரூபாய் கொடுக்கணுமாம். தற்கொலைகளை ஊக்குவிக்கிறாரா?
‘அறம்’ சினிமா பற்றி?
– எம். முருகன், பாலக்கோடு
நல்ல திரைப்படம். நயன்தாரா நடிப்பு பிரமாதம். குழந்தைகளுடன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.