குருவும் இறைவனும் ஒன்றே!

ஏகநாதர் ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கி அவரிடம் கல்வி பயின்று வந்தார். தினசரி குருகுலத்திற்கு செய்யவேண்டிய கடமைகளையும் செய்து வந்தார். வழக்கம் போல் ஒருநாள் ஆற்றில் குளித்துவிட்டு, நீர்க்குட காவடியுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்னல் போல் வெளிச்சம். அருகிலுள்ள மரத்தின் கீழ் பகவான் தத்தாத்ரேயர் நின்றுகொண்டு ஏகநாதருக்கு தரிசனம் கொடுத்தார். இந்த  காட்சியைப் பார்த்த ஏகநாதர் இறைவனை வலம்வந்து வணங்கினார். அடுத்து குருகுலத்திற்குப் புறப்பட்டார். குருகுலத்தில் செய்ய வேண்டிய வேலையில் மூழ்கினார்.

குருநாதர் ஏகநாத்திடம் இன்று ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்டதற்கு, ஒன்றுமே இல்லை” என்று பதிலளித்தார்.

இன்று உனக்கு பகவான் தத்தாத்ரேயர் தரிசனம் கொடுத்தாரே… அதைப்பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே” என்றார்.

ஆமாம். இன்று தத்தாத்ரேயர் தரிசனம் கண்டேன்” என்றார்.

என்னப்பா இது! பகவான் தத்தாத்ரேயர் தரிசனத்தை சர்வ சாதாரணமாக சொல்கிறாயே… பூவுலகில் யாருக்குமே கிடைக்காத பாக்கியம் அல்லவா உனக்குக் கிடைத்திருக்கிறது” என்றார் குருநாதர்.

மகராஜ்! என்னை மன்னிக்கவேண்டும். இன்று நான் பகவான் தத்தாத்ரேயரை தரிசித்தது உண்மைதான். இதில் நான் ஆனந்தப்பட ஒன்றுமே இல்லையே… நான்தான் தத்தாத்ரேயரைத் தங்கள் வடிவில் ஒவ்வொரு கணமும் தரிசித்துக் கொண்டிருக்கிறேனே” என்றார் ஏகநாதர்.

 

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்