அவருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் ஒரு கிலோ இனிப்பைக் கூட ஒரே நேரத்தில் ரசித்து சுவைத்து சாப்பிட்டு விடுவார். அதே நேரத்தில் ஸ்ரீராமர் மீது மிகுந்த பக்தியுடையவர். சமர்த்த ராமதாஸரின் சீடர். ஆன்மிக சாதனையிலும் ஈடுபட்டு வந்தார். ஒருநாள் அவர், இனிப்புக்கு நான் இப்படி அடிமையாகி விட்டேனே” என்று வருந்தினார். இனி இனிப்பு சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தார்.
அன்று ஒரு கிலோ இனிப்பு வாங்கினார். அதற்கு சமமான பசுஞ்சாணத்தை அதனுடன் கலந்தார். அந்தக் கலவையைச் சாப்பிட ஆரம்பித்தார். குமட்டல் எடுத்தது. வாந்தி எடுத்தார். ஓ… மனமே! இந்த வாந்தியால் எப்படி அருவெறுப்பு அடைகிறாயோ அதுபோன்று இனிப்புகளையும் வெறுத்து ஒதுக்கு” என்று தனது மனதுக்கு அறிவுறுத்தினார். அன்றுமுதல் இனிப்பு சாப்பிடுவதில் இருந்த மோகம் இடம் தெரியாமல் போயிற்று. அதுபோல பணம் கிடைத்தாலும் அதை தூக்கி மண்ணில் வீசியெறிந்து விடுவார். பணத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இவர்தான் பிற்காலத்தில் பிரபலமாக அழைக்கப்பெற்ற கர்னாடகாவில் கனகாபூருக்கு அருகில் உள்ள சிஞ்சோலி என்ற ஊரில் பிறந்த ஸ்ரீதர சுவாமிகள் .
மகான்களுக்கு புலனடக்கம் மிகவும் அவசியம். புலன்களை வெல்வது கடினமாயினும் சாதனையாளர்கள் அதை கடினமான முயற்சிகளின் காரணமாக அடக்கி வெற்றி பெற்றார்கள்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்