நேர்மறையான சூழலை உருவாக்க வேண்டும்

திருச்சிராப்பள்ளியில் நடந்த அகில பாரத வித்யார்த்தி பரிக்ஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பின் சிந்தனை அமர்வின்போது (விசார் பைடக்) வளாகங்களில் “மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள மாணவர் வாழ்க்கை” என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வி அழுத்தம் மற்றும் பதட்டங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏ.பி.வி.பி கோருகிறது. மன அழுத்தம் இல்லாத, மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள மாணவர் வாழ்க்கையை நோக்கிய இந்த முக்கிய படியானது நிறுவன மற்றும் கொள்கை நிலைகளில் செய்யப்பட வேண்டும். கொரோனா தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

மாணவர்களிடையே கல்வி அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை நீக்கி, மன அழுத்தம் இல்லாத, நேர்மறையான வளாகங்கள் மற்றும் கல்வி வாழ்க்கை என்ற பெரிய இலக்கை அடைய, கல்வி வளாகங்களில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏ.பி.வி.பி கோருகிறது. மாணவர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்கள், மாணவர்களின் மன ஆரோக்கிய மேம்பாட்டுக்கு இது போன்ற திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் காலத்தின் தேவையாக உள்ளது. திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற ஏ.பி.வி.பியின் விசார் பைடக்கில், வளாகங்களை ‘மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள மாணவர் வாழ்க்கையின் மையமாக’ மாற்றவும், மாணவர்கள் கல்வி பெறுவதற்கு சாதகமான சூழலை உருவாக்கவும், இதனால் மாணவர்கள் சமூக ரீதியாக வளர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்கு இறுதியில் பங்களிக்கவும் ஏ.பி.வி.பி கோருகிறது. ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்க இந்த திசையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதில் ஏ.பி.வி.பி தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது.

யக்ஞவல்கிய சுக்லா கூறுகையில், “கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பல தற்கொலை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த விதம் மிகவும் கவலை அளிக்கிறது. இந்த நிலையை மேம்படுத்த, பல்வேறு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கல்வி அழுத்தத்தைக் குறைக்க, அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து, கல்வி வளாகங்களில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரவும், மாணவர்களுக்கு திறந்த மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.