நேபாள பிரதமர் ஒலி ராமர் இந்தியர் இல்லை நேபாளம் என்று தெரிவித்து இருந்தார். நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், நேபாள பிரதமர் கருத்து குறித்து விளக்கம் தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கேபி ஷர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அரசியல் நோக்கத்தோடு பேசவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறவில்லை” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.