”மதசார்பற்றவன்” என்கிற வார்த்தை நம்நாட்டின் அகராதியில் இல்லாதது. 1970 க்கு பிறகு உருவாக்கப்பட்டது. இந்திராகாந்தியின் ”அவசர நிலை பிரகடனம்” செய்யப்பட்ட காலத்தில் பாரத தேச மக்களின் கைகால்கள் கட்டப்பட்டு, வாய் ஒட்டப்பட்டு, எதிர்ப்புக்களை காண்பிக்க வழியே இல்லாமல் செய்யப்பட்டு, அரசியல் அமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு அதில் சேர்க்கப்பட்டது.
மதசார்ப்பின்மை இப்போது ஒரு கெட்ட வார்த்தையானது. அதை உபயோகிப்பவர்கள் அனைவருமே அதை ஹிந்து மதத்திற்கு எதிராகவே உபயோகிக்கின்றனர். வேதாளம் வேதம் பேசுவது போல, நரி நாட்டாமை செய்வது போல, கசாப்புக்கடைக்காரன் காருண்யம் ஓதுவது போல மனிதநேய மக்கள் கட்சியின் ஜவஹருல்லாவும், மஜ்லிஸ் கட்சியின் அசாருதின் ஓவைசியும், கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியின் பாதரி எஸ்றா சற்குணம், ‘மதசார்ப்பின்மை’ பேசுகிறார்கள். இதனால்தான் இவ்வார்த்தை கெட்ட வார்த்தையானது என்று சொன்னேன்.
‘‘செக்குலரிசம்’’ என்பது மனோதத்துவ ரீதியாக ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை (Guilty Conscious). ‘‘நான் எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நான் மதவாதி’’ எனும் எண்ணம் என்னுள் பிரச்சாரம் செய்து விதைக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தை செய்பவர்கள் யார்? அனைவரும் ஹிந்துமத விரோதிகள்! ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள்!
அப்படியானால் அவர்கள் அனைவருமே வேற்றுமதத்துக்காரர்களா? அதுதான் இல்லை. வேற்று மதத்துக்காரர்களில் பெரும்பான்மையினர், ஹிந்து மதத்தில் ஒரு சிறுபான்மையினர் இப்படி செய்கிறார்கள். இது சமூகத்தை பொறுத்தவரையிலான நடப்பு அரசியலை பொறுத்தவரை பாஜக தவிர அத்தனை கட்சிகளும் இந்த செக்குலரிசத்துக்குள் புகுந்துகொண்ட கருப்பு ஆடுகள்.மற்ற கட்சிக்காரர்கள் வேற்று மதத்தவரை தாஜா செய்ய அவர்களின் செருப்புக்கால்களை நாவால் சுத்தம் செய்பவர்கள்! அவர்களின் ஒட்டுமொத்த ஓட்டையும் ‘பல்க்காக’ லபக்குவதற்காக தன்மானத்தை அடகு வைத்து அவர்களுக்கு பாத பூஜை செய்பவர்கள், ஓட்டுப்பொறுக்கிகள், பச்சைத்துரோகிகள், ஏமாற்றும் வித்தையில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
முழுக்க முழுக்க ‘பச்சை மதவாதிகள்’ தங்களுக்கு தாங்களே ‘செக்குலரிஸ்ட்’ பட்டம் கொடுத்துக் கொண்டு ஹிந்து இயக்கங்கள் – வலதுசாரி சிந்தனையாளர்கள் – பாஜகவை – மதவாதிகளாக சித்தரிப்பதற்கு காரணம் நம்முள் நம் ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும் புகட்டப்பட்டு ‘சர்வதர்ம சம்பாவம்’ என்கிற எண்ணங்கள்தான்.
இது நமக்கு வலு சேர்ப்பதற்கு பதிலாக நம்மை பலவீனமாக்கியது. இது பலம் கொடுப்பதற்கு பதிலாக நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. விளைவு ஹிந்து என்று சொல்வதும் ஹிந்து மத எதிர்ப்பாளர்களை எதிர்ப்பதும் ‘‘மதச்சார்பற்ற தன்மை’’க்கு விரோதமாக சித்தரிக்கப்பட்டது. இந்த ‘‘மதசார்ப்பற்ற தன்மை’’ நம்மை எப்படியெல்லாம் காயப்படுத்துகிறது. பலவீனமாக்குகிறது. நம்மையும் நாட்டையும் அழித்து வருகிறது என்பதற்கு காலம்காலமாக மட்டுமல்ல சமீபகாலத்திலும் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது! முகநூலில் ஒரு பெரியவர், மெத்தப்படித்தவர் – அறிவுஜீவி. அவர் தன் சாதியை தாக்குபவர்களை திருப்பித் தாக்குகிறார்.
ஆனால் ஹிந்து மத ஆதரவாளர்களை வசைபாடுகிறார். காரணம் அவர் நடுநிலை வாதியாம். தொலைக்காட்சி விவாத மேடைகளில் பல ஹிந்து பேச்சாளர்கள், ஹிந்துமதம் சிறுமைப்படுத்தப்படும்போது வாய்மூடி மௌனம் காக்கிறார்கள். காரணம் நடுநிலைவாதிகளாம்!
ஒரு பாரம்பரிய சினிமா குடும்ப வாரிசு மதம் மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு பாடகி, ஒரு அரசியல் கட்சித் தலைவர், ஒரு முற்பட்ட பிரிவின் தலைவர், ஏன் கோயில் தர்மகர்த்தாக்கள் மதம் மாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்குப் பின் இவர்களின் ஹிந்துமத தூஷணை பலமடங்கு உயர்கிறது. உச்ச ஸ்தாயிக்கு போகிறது. இவர்கள் செக்குலரிஸ்டாக சித்தரிக்கப்படுகிறார்கள். நம்முடைய மூல்யங்களை சிதைக்க தைரியமான முயற்சிகள் செய்கிறார்கள். கோயில் பூசாரிகள், கர்நாடக இசைக் கலைஞர்கள், மதமாற்ற வலைக்குள் வீழ்த்தப்படுகிறார்கள். இதை தட்டிக்கேட்டால் நமக்கு மதவாதம் சாயம் பூசப்படுகிறது.
ஓட்டுக்காக அரசியல்வாதிகள் ‘‘செக்குலர்’’ சாக்கடையில் நீச்சலடிக்கிறார்கள். நோட்டுக்காகவும் தொழில் வாய்ப்புகளுக்காகவும் பதவி, பட்டம், மௌசுக்காகவும் இந்த மதமாற்ற வலையில் பல பிரபலங்கள் வீழ்த்தப்படுகிறார்கள்.
என்னுடைய ஹிந்து மதம், தோன்றியபோது அதற்கு எதிராக எந்த மதமும் பிறக்கவில்லை. உள்ளுக்குள்ளேயே இருந்த ஷண் மதங்களின் ஒற்றுமைக்குத்தான் சர்வதர்ம சமபாவம் நமக்கு கற்பிக்கப்பட்டது.
இப்போது அப்பட்டமாக நம்மை ஒழிக்க செயல்படும் மற்ற மதத்திலிருந்து காத்துக்கொள்ள ‘நான் மத சார்புள்ளவனாக’ ஆக்கப்பட்டேன். எனக்கு எம்மதமும் சம்மதம் இல்லை. என் மதத்தை இழிவுபடுத்துவது, தாக்குவது, என் சகோதரர்களை மதமாற்ற வலையிலே வீழ்த்துவது என யார் செய்தாலும் அவர்கள் மதம் எனக்கு சம்மதம் இல்லை!
இதை வெளிப்படையாக எதிர்க்காமல், கருத்து கூறாமல், செயல்படாமல் இருந்தால்,நம்முடைய சர்வ தர்ம சமபாவம் நம்மையே அழிக்கும் ஆயுதமாகி விடும்!
‘‘ஹிந்துமதம் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும்; ஹிந்தமதம் ஒரு உண்மையான மதசார்ப்பற்ற மதம்’’ எனும் வார்த்தைகள் தான் இதுவரை நம்மை பலவீனமாக்கிவிட்டது. ஹிந்துமதம் தன்னை எதிர்ப்பவர்களை ஏற்காது. தரைமட்டமாக்கும். ஹிந்து மதம் தன்னை காக்க இழந்த நம் பகுதிகளை மீண்டும் பிடிக்கும். மதம் மாற்றத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் எதிர்க்கும். மதம் மாறிய அத்தனை பேரையும் தாய்மதம் திருப்பும் என்கிற எண்ணங்களே நம் நாட்டை வாழவிடும்.
எனக்கு மதசார்பற்றவன் என்னும் மாயை தேவையில்லை. மதசார்பற்ற நிலையில் கிறிஸ்தவமோ இஸ்லாமோ இல்லை. எனவே நான் மட்டும் ஏன் மதசார்ப்பற்றவனாக இருக்கவேண்டும்? எனவே நான் மதசார்புள்ளவனாக இருப்பதே சரி!