நவ.,23ல் கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு

நாளை   (நவ.,23) வீடியோ கான்பரன்சிங் மூலம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நவ.,1 முதல் 23ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட நிலையில், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.