போட்லண்ட் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அசாமில் மற்றொரு மகத்தான வெற்றியை திவா தன்னாட்சி பிரதேசத தேர்தலிலும் பெற்றுள்ளது. 36 உறுப்பினர்கள் கொண்ட தேர்தலில் 33 பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் காங்கிரஸ் 1 இடத்திலும், அசாம் கனபரிசத் இரண்டு இடங்களில் வென்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து அகில பாரத தலைவர் ஜேபி. நட்டா அஸாம் மாநில பாஜகவிற்கு பாராட்டுதலையும், வாக்களர்களுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார். தேர்தல் நடைபெற்ற திவா தன்னாட்சி பிரதேசம் நாகூம், மொர்ஜிகார், ஹோவை, கம்ருங், ஆகிய மாவட்டங்களை அடங்கிய 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தன்னாட்சி பிரதேச வெற்றியை தொடர்ந்து எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலை பாஜக கைபற்றும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.