பொறுமையாக படித்து தெரிந்துகொண்டு பின் ஆவன செய்வோம். எத்தனையோ திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் அவற்றில் ஒரு சிலவற்றையாவது பார்ப்போம்.
ஸ்வச் பாரத் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட போதுதான் நம்மை சுற்றி குப்பை இருக்கிறது, அதை நாமும் சுத்தம் செய்யலாம், நமக்கு குப்பை போட அதிகாரம் இல்லை என்ற எண்ணமே பிறந்தது. தன் தேசத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள எந்த மனிதன் துணிகிறானோ அவன் சொல், செயல், சிந்தனை எல்லாம் மேம்படும் என்று இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். பலர் இன்று இதை கையிெலடுத்து சுத்தம் சுத்தம் என்று அதை சுற்றி திட்டம் தீட்டுகிறார்கள்.
மண்வள அட்டை
எதை விதைப்பது என்று தெரியாமல் மண்ணின் தரம் தெரியாமல் எதையோ விதைத்து, எதையோ அறுவடை செய்துகொண்டிருந்த இடத்தில், அந்தந்த மண்ணின் தரத்தை அறிய மண்வள அட்டையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், மண்ணின் நிலை அறிந்து, அதற்கேற்ற பயிரை விதைக்கலாம் என்ற திட்டம் தெளிவானது.
பயிர் காப்பீடு
முன்பிருந்த பயிர் காப்பீடு முறையை மாற்றி, தெளிவாக்கி, விதைக்கும்போது பயிர் அழிந்தால், விளைந்த பிறகு பொய்த்தால், அறுவடை செய்த பிறகு நாசம் ஏற்பட்டால், அறுவடை செய்து விற்பதற்கு முன் மழை பெய்து கெட்டது என்றாலும் கூட காப்பீடு என்று அந்த விளைச்சல் விற்று போகும்வரை காப்பீடு முறையை அறிமுகப்படுத்தினார்.
ஆவாஸ் யோஜனா
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேருக்கு வீடுகள் இலவசமாக கட்டி தரப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் ஒழுகாத வீடுகள், தரமான வாழ்க்கையை மக்கள் காண்கிறார்கள்.