ஸ்ரீநகரில் கேட்ட வேத முழக்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சௌக் சதுக்கத்தில் ஏப்ரல் 30 அன்று சங்கர ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது – நாலு வேதங்கள் முழங்க!அன்று அருகில் உள்ள தொன்மையான சங்கராச்சாரியார் மலைக் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்துக் கொண்டார்கள். முன்னதாக ஆறு நாட்கள் ஹோமம், ஆன்மிக சோற்பொழிவு, ராம பட்டாபிஷேகம், ராதா கல்யாணம், பஜனை, பூஜை, பிரசாதம் என்று மக்கள் நம்மூர் மாதிரியே விமரிசையாக எல்லாம் நடத்தினார்கள். நூற்றாண்டுகளுக்கு முன் ஹிந்து சமுதாயத்தை சமய ரீதியில் சீர்திருத்தியபடி தெற்கே காலடியிலிருந்து இமயம் வரை யாத்திரை செத ஆதிசங்கரரின் ஜெயந்தியை அதே இமயத்தின் மடியில் மக்கள் பக்தியோடு கொண்டாடுகிறார்கள் என்பது எவ்வளவு மகத்தான செதி! அதுவும் பயங்கரவாதம் தாண்டவமாடும் காஷ்மீரில்!
வேதமும் சைவமும் தழைத்த புண்ய பூமி காஷ்மீர். பாரதமாதாவின் மணிமகுடமாக விளங்கும் அந்த மாநிலத்தின் ஹிந்துக்களுக்கு சுதந்திர பாரதத்திலும் கொடிய சோதனைகள். பிறந்த மண்ணிலிருந்து சிதறடிக்கப்பட்டு தவித்து வருகிற அந்த காஷ்மீர் பண்டிட்களுக்கு தங்கள் சோந்த ஊரில் சோந்த சமயத்தை கடைப்பிடிக்க, கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெறும் சங்கர ஜெயந்தி போன்ற ஒரு வாப்பு பொன்னான வாப்பாக தென்படத் தொடங்கியிருப்பது தேசபக்த அமைப்புகளின் தொடர்ந்த முயற்சியின் பலன். குறிப்பாக காஷ்மீர் குழந்தைகளை உட்கார வைத்து அம்பிகையாக உபசரித்து நடத்தப்பட்ட கன்யா பூஜை பண்டித் குடும்பங்களில் பரவச அலை தவழச் செதுள்ளது.
லால் சௌக்கில் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சத்சங்கத்தில் ஸ்வாமி விஸ்வாத்மானந்த சரஸ்வதி அருளுரை நிகழ்த்துகையில் கடவுள் அருளால் விரைவில் காஷ்மீரில் அமைதி திரும்பும் என்று கூறினார். காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் சென்றிருந்த வேத வித்வான்கள் லால் சௌக்கில் வேத முழக்கம் செதது புது வரலாறாக அமைந்தது. நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்ட காஷ்மீர மக்களுக்கு அன்னதானம் வழங்க ‘ஒரே பாரதம், வலிமையான பாரதம்’ அமைப்பினர் ஏற்பாடு செதிருந்தார்கள்.
ஆண்டுதோறும் சங்கர ஜெயந்தியில் மாநில ஆளுநர், துணை முதல்வர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்வது அனைத்து ஹிந்துக்களூக்கும் தெம்பு தருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு உற்சவத்தின் போது ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணைச் செயலர் சுரேஷ் சோனி, அகில பாரத சஹ சம்பர்க்க பிரமுக் அருண் குமார், ஜம்மு சேவா பாரதியின் ஜெயதேவ் ஆகியோர் சங்கராச்சாரியார் மலைக் கோயிலுக்கு வந்து தரிசனம் செதது சிறப்பு அம்சம்.
பண்டிட் மக்கள் தங்கள் மூதாதையர் பூமியை மீட்டுக் கொள்ள காஷ்மீரில் தகுந்த சூழல் உருவாக்கப்பட்டுவருகிறது. அவர்கள் தங்கள் பாரம்பரியம் எனும் செல்வத்தை மீட்டுக்கொள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியர் பக்தர்கள் நடத்தி வரும் சங்கர ஜெயந்தி உற்சவம் அருமையாகக் கைகொடுக்கும் என்கிறார் சென்னை வழக்கறிஞர் ஆதி பாலசுப்ரமணியம். அண்மையில் ஸ்ரீநகர் சென்று சங்கர ஜெயந்தி உற்சவத்தில் பங்கேற்றுத் திரும்பியுள்ள நூற்றுக்கணகான தமிழ்க் குடும்பங்களில் இவர் குடும்பமும் ஒன்று. யாத்திரையில் 40 வேத வித்வான்களும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்: நியூஸ் பாரதி இணையதளம்; காமகோடி