ஸ்ரீ ராமானுஜர் உள்முகமாகி, மகாவிஷ்ணுவுடன் ஐக்கியமாகிவிட ஆயத்தம் செதுகொள்ளலானார்.
ஒருநாள், ஸ்ரீராமானுஜர் கண்களின் ஓரத்திலிருந்து இரண்டு துளி ரத்தம் சிந்தியது. தவம் கலைந்த ஸ்ரீ ராமானுஜர், ‘ஸ்ரீபெரும்புதூர் சீடர்கள் என் சிலை வடித்து, இன்று அதன் கண்திறக்கும் சடங்கையும் முடித்துவிட்டார்கள்’ என்றார். பக்தர்கள் அனைவரையும் அருகில் அழைத்து அவர்களுக்கு எழுபத்துநான்கு உபதேச ரத்தினங்களை வழங்கினார். அதன்பின் அவரது திருவுருவக் கற்சிலை ஒன்று வடிக்கப்பட்டுக் காவிரி தீர்த்தத்தில் நீராட்டப்பட்டது. உடையவர் என்று பக்தியுடன் அழைக்கப்பெறும் ஸ்ரீ ராமானுஜர், அந்த விக்ரகத்தின் சிரஸில், தமது சுவாசம் செலுத்தி, தனது சக்தியைப் பரிபூரணமாக அதில் ஏற்றினார். குழந்தைகளே, இது எனது இரண்டாம் சரீரம். இதில் நான் குடியிருப்பேன்” என்று அறிவித்தார். நைந்த தன் உடலத்தை உதறி, மகாவிஷ்ணுவின் வைகுண்டம் சென்றார்.
சரியாக 879 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அன்றைய தினம் அங்கிருந்த பக்தர்களுக்கு ஏற்பட்ட மெசிலிர்ப்பை இன்றும் ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தின் முன்னிலையில் பக்தர்கள் அனுபவிக்கலாம்.
(விக்ரக ஆராதனை என்றால் பக்தன் வழிபடுவது கல்லை அல்ல, கடவுளை என்பதற்கு இது வரலாற்று அத்தாட்சி).