தஞ்சாவூர் மாவட்டம் மேலவிசலுாரில் நாகரசம்பேட்டை வாய்க்கால் அருகில் செல்வமணி 47 என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. நேற்று மதியம் செல்வமணி தென்னந்தோப்பில் கீழே விழுந்த தென்னை மட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
ஒரு தென்னை மட்டையை அகற்றியபோது மண்ணில் மேலாக புதைந்த நிலையில் பெருமாள் சிலை இருப்பதை பார்த்தார். இது குறித்து நாச்சியார்கோவில் போலீசாருக்கும் வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளித்தார். வருவாய் ஆய்வாளர் பூமா, வி.ஏ.ஓ. ராஜசேகரன் ஆகியோர்ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 1.5 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான அந்த சிலையை மீட்டு பாதுகாப்பாக கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை மதிப்பீடு குழுவினர் சிலையை ஆய்வு செய்ய உள்ளனர்.