செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
தேன் சிந்தும் பூக்கள் அணிந்த இயல்பாகவே மண ம ்தங்கிய கரிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரிடத்துமில்லாத பேரின்பம் நமக்கு யாண்டும் சொந்தம் , நம்குற்றஙகள் களையப் படும்போது அது அனுபூதியாகிவிடுகிறது. அதற்காக நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ!நம் வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது செந்தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். கருணை நிரம்பி வழியும் அழகிய கண்களை உடைய அரசன் அவன். அடியவர்களாகிய நமக்கு நிறையமிர்தம் h அவன். சிவஞானம் என்னும்நலன் அவனிடத்தினீன்று நமக்கு வருகிறது. இதன் ்பொருட்டு, தாமரை மலர்கள் தவழும் ் இந்தப் பொய்கையில் பாய்ந்து மூழ்கி நீராடி அவன் பெருமை பாடுவோம்.
அவனே நம்மைத்தேடிவரும் கருணைக்கடல் . அவன் வருமுன் நீராடி..நம் யாக்கைதனைச் சுத்தமாக்கி, நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி நின்றால், அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான்.