ஹிந்து விரோத திமுக
* ஹிந்து என்றால் திருடன் என கருணாநிதியும், திருமணத்தின் போது புரோகிதர்கள் சொல்லும் மந்திரங்கள் கேவலமாக இருக்கும் என மு.க. ஸ்டாலினும் பேசி, தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
முஸ்லீம், கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காக ஹிந்துக்களை மட்டும் இழிவுபடுத்தும் திமுகவைத் தோற்கடிப்போம்.
ஹிந்து (சனாதன) தர்மத்தை ஒழிக்கும் திமுக
*ஹிந்து தர்மமும் சனாதன தர்மமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என கி.வீரமணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமான கம்யூனிஸ கூட்டத்தில் பேசினார்.
* அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின் ஹிந்து சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொசுவைப் போல ஒழிக்கப்பட வேண்டியவை என்றார்.
ஹிந்து மதத்தை ஒழிக்க நினைக்கும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் திமுக
* திமுக ஆட்சியில் இருந்த போதுதான் (1971) ராமருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனோம். விநாயகர் சிலையை முச்சந்தியில் போட்டு உடைத்தோம். அடுத்த தேர்தலில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது -– கி. வீரமணி
* 100 வருட கோயிலை இடித்தோம். சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயிலை இடித்தோம். என்ன செய்தது உங்க கடவுள்? ஹிந்துக்கள் ஓட்டை எப்படி வாங்குவது என்பது எங்களுக்குத் தெரியும் – -டி.ஆர்.பாலு.
தெய்வபக்தி உள்ள ஹிந்துக்களே! நமது தெய்வங்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
ஆலயத்தை சீரழிக்கும் திமுக
* ஹிந்து கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி வங்கியில் வைப்பதாகக் கூறி கபட நாடகம் ஆடும் திமுக அதன் முழுவிபரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
* ஆலய நிர்வாகத்தில் ஹிந்து அல்லாதவர்களை நியமித்து ஹிந்து சமய நம்பிக்கைகளை – ஹிந்துசமய சடங்கு, சம்பிரதாயங்களை சீர்குலைக்கச் செய்கிறது திமுக அரசு.
* கோயில் சொத்துக்களை மீட்டதாகக் கூறும் திமுக அரசு அதை யாரிடம் இருந்து மீட்டது? ஆக்கிரமிப்பாளர் மீது போடப்பட்ட வழக்கின் நிலவரம் என்ன? வாடகை, குத்தகை பாக்கி வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசிடம் பதில் இல்லை.
ஆலயத்தை சீரழிக்கும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
பட்டியல் சமூக மக்களின் சலுகைகளைப் பறித்து முஸ்லீம் -– கிறிஸ்தவர்களுக்கு தாரை வார்க்கும் திமுக
* ஹிந்து பட்டியல் சமூக மக்கள் சமூக ரீதியாக புறக்கணிப்பு செய்யும் நிலை இருந்ததால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை அரசியல் சாஸனம் கொடுத்துள்ளது. இது சமூக நீதிக்கான ஏற்பாடு எனப்படுகிறது.
இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை மதம்மாறிய கிறிஸ்தவ, முஸ்லீம்களுக்கும் பெற்றுத் தருவோம் என திமுக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உட்பட திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தன்மானத்தோடு ஹிந்துவாகவே வாழ்ந்து வரும் பட்டியல் சமூக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு துணைபோய் ஹிந்துக்களை வஞ்சிக்கும் திமுக கூட்டணியை வரும் தேர்தலில் தோற்கடிக்கச் செய்வோம்.
தமிழ்மொழி கல்வியை அழிக்கும் திமுக
* மோடி அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றுள்ளது. திமுக அரசு தேசிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் ஏற்க மறுத்து தமிழ் மொழிக்கு துரோகம் செய்கிறது.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் நிதியில் ‘நவோதயா பள்ளி’ நிறுவி தமிழ் வழிக் கல்வி தருவது மத்திய அரசின் செயல்திட்டம். இதில் ஹிந்தியும் ஒரு பாடமாக உள்ளது என்று காரணம் காட்டி நவோதயாவை புறக்கணித்து தமிழ்மொழிக்கு துரோகம் இழைக்கிறது திமுக.
தமிழ்மொழிக் கல்வியை புறக்கணிக்கும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
மீனவர்கள் / இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான திமுக
* காங்கிரஸ் -− திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த போது 2004- − 2010ல் 33 தமிழக மீனவர்களும் 2011-− 2014ல் 38 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2009ல் இலங்கையில் விடுதலைப்புலிகள் – சிங்கள ராணுவம் இடையே நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். அப்போது திமுக தலைமை டெல்லியில் முகாமிட்டு தங்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கித் தரும்படி காங்கிரசை மிரட்டிக் கொண்டிருந்தது. திமுக மட்டும் அப்போது நினைத்திருந்தால் காங்கிரசுக்கு நெருக்கடி தந்து இந்திய அரசின் மூலம் படுகொலையை தடுத்து நிறுத்தி இலங்கைத் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.
மீனவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்த திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
பட்டியலின மக்களின் விரோதி திமுக
* 21.11.23 – திண்டிவனம் நகர் மன்ற துணைத்தலைவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருக்கை ஒதுக்காமல் தீண்டாமை கொடுமை.
* 26.12.22 – புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்தது.
குற்றவாளிகளை தப்பிக்கவிட்டு பட்டியல் சமூக மக்களுக்கு துரோகம் செய்யும் திமுகவைத் தோற்கடிப்போம்.
எஸ்.டி /எஸ்.சி மக்களுக்கு எதிரான திமுக
* முஸ்லீம்களின் தோழன் திமுக என்பார்கள்; ஆனால் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக வாக்களிக்க மாட்டார்கள். பட்டியல் சமூக மக்களின் பாதுகாவலன் திமுக என்பார்கள்; ஆனால் பட்டியல் சமூகத்தவரான ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆக வாக்களிக்க மாட்டார்கள். மலைவாழ் மக்களின் உற்ற நண்பன் திமுக என்பார்கள்; ஆனால் மலைவாழ் சமூகத்தவரான திரௌபதி முர்மு ஜனாதிபதியாக வாக்களிக்க மாட்டார்கள்.
பட்டியல் சமூக, மலைவாழ் மக்களின் எதிரி திமுகவைத் தோற்கடிப்போம்.
ஊழல்வாதிகளை ஊக்குவிக்கும் திமுக
* ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றமே ஆட்சேபனை தெரிவித்த பின்னரும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கத் தயங்கியது ஏன்? அமைச்சர் பொன்முடி, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமான பின்னரும் அமைச்சர்களாக நீடிப்பது ஏன்? 2G ஊழல் வழக்கு ஆ.ராசா மீதும் கனிமொழி மீதும் தற்போதும் நிலுவையில் உள்ள போதும் திமுகவின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது ஏன்?
ஊழல்வாதிகளை வரவேற்கும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
தமிழகத்தை போதையில் மூழ்கடித்த திமுக
* நீங்கள் கொடுப்பதோ ஒரு ரூபாய் பெறுவதோ ஒரு லட்சம் என அடுக்கு மொழி பேசி தமிழகத்தில் முதன்முதலாக லாட்டரியை அறிமுகப்படுத்தி தமிழர்களின் வாழ்க்கையை நாசமாக்கியவர் அண்ணாதுரை.
* கள்ளுக்கடையை திறக்க வேண்டாம் என மூதறிஞர் ராஜாஜி கருணாநிதி வீட்டிற்கே சென்று கெஞ்சிக் கேட்டும் அதை உதாசீனப்படுத்தி விட்டு அன்று கள்ளுக் கடையை முதன்முதலில் திறந்து பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியவர் கருணாநிதி.
* போதை கடத்தல் மன்னர்களை திமுகவில் பொறுப்பு கொடுத்து இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியவர்கள் ஸ்டாலினும், உதயநிதியும்.
தமிழகத்தை போதையில் மூழ்கடித்த திமுகவைத் தோற்கடிப்போம்.
திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு
* நாட்டின் எந்த பகுதியில் வெடிகுண்டு வைத்தவனுக்கும் பயிற்சிக் களமாக இருப்பது தமிழகமே என்கிறது மத்திய புலனாய்வுத்துறை. பெங்களுர், ராமேஸ்வரம் கஃபே-இல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சம்பந்தமாக தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை நடக்கிறது.
* தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையை தடுக்க முற்பட்டபோது திமுகவினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை ரௌடிகள் அடித்து நொறுக்கியதை வேடிக்கை பார்த்தது திமுக அரசு. இதுபோல் தமிழகமெங்கும் தினசரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுகவைத் தோற்கடிப்போம்.