இரண்டு தினங்களுக்கு முன் பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாண கரக் கிராம கோயிலை ஜமாத் உலோமா இ இஸ்லாம் எனும் முஸ்லிம் அமைப்பினர் தீ வைத்து கொளுத்தி, இடித்து தரைமட்டமாக்கினர். இந்த கோயிலை புணரமைக்க அந்த கிராம ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தை மீறி அக்கிராமத்தினர் இந்த பாதக செயலை செய்துள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் எல்லையோர பகுதியான ஹிரா நகர் செக்டரில் உள்ள ஒரு கோயில் மீது முஸ்லிம் பயங்கரவாதிகளால் கையெறி குண்டு வீசப்பட்டது. குண்டு கோயிலுக்கு வெளியே வெடித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது அப்பகுதி ஹிந்துக்களிடையே பயத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டே நடத்தப்பட்டது.