எந்த ஒரு தேச விரோத செயல்கள் நடந்தாலும் சரி, அதைப் பற்றி விவாதிக்காமல் அச்செயலின் எதிர்வினையாக நடந்த ஒன்றை விவாதப் பொருளாக்கி மக்களை திசை திருப்பிச் செல்வதில் இடதுசார்பு, இஸ்லாமிய சார்பு ஊடகங்கள் அற்புதத் திறன் படைத்தவர்கள்.
அவர்களுக்கு 56 பேர் திட்டமிட்டு உயிரோடு எரிக்கப்பட்ட கோத்ரா ரயில் சம்பவம் நினைவில் இருக்காது. ஆனால் அதன்பின் விளைவாக ஜிகாதிய பயங்கரவாதாத்தித்கு ஆதரவளித்த இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் நினைவில் இருக்கும். அதுவே விவாதப் பொருள் ஆகும்.
நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலோ, மும்பையில் ரயில்வே ஸ்டேஷன் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தி நூற்றுக்கணக்கானவரை கொன்ற செயலோ விவாதம் ஆகாது. ஆனால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்கள் தூக்கிலிடப்படுவது விவாதப் பொருள் ஆகும்.
தூக்கிலிப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவாக பல்கலைக் கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், அதனை எதிர்த்தவர் தாக்கப்படுவதும் விவாதம் ஆகாது. மாறாக தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் தலைவன் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செயபட்டதால் தற்கொலை செது கொண்டால் அதுதான் விவாதப் பொருள் ஆகும்.
அப்படித்தான் இப்போது
ஜேஎன்யூ பிரச்சினயும் திசை திருப்பப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் விவாதப் பொருள் ஆகவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ‘ இந்தியாவை ஒழிப்போம், காஷ்மீரை விடுவிப்போம், அப்ஸல், யாகூப்பை போற்றுவோம் ‘ என்று எழுப்பப்பட்ட தேச விரோத கோஷங்கள் விவாதப் பொருளாகவில்லை. ஊடகங்களால் கண்டிக்கப்படவில்லை. ஆனால் தேசத்தை ஒழிக்க முன்வந்த மாணவர் தலைவனை கைது செது நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது சில அதீத தேசபக்த வழக்கறிஞர்களால் அவன் தாக்கப்பட்டதும் அவனுக்கு ஆதரவாக நின்ற ஊடகத்தினர் தாக்கப்பட்டதும் தான் இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது.
தேச விரோத சக்திகள் தப்பு செதுகொண்டே இருப்பார்கள், அவர்களை சட்டத்துறை மட்டுமே கேள்வி கேட்டு நியாயம் வழங்க வேண்டும் என்ற நிலை நீடித்தால் இவர்களின் தேச விரோத செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட குஜராத் மக்கள் சட்டத்துறைக்காக காத்திராமல் தாங்களே மருத்துவம் பார்த்ததன் விளைவுதான் கோத்ராவுக்குப் பிறகு இன்று வரை அங்கு மதக் கலவரம் இல்லை.
குஜராத் மக்களிடம் இருந்து தில்லி வழக்கறிஞர்கள் பாடம் கற்றுக் கொண்டார்கள் போலும்.! மத்திய அரசும் திசை திருப்பும் சதியில் விழவில்லை. மாணவர் தலைவர் கன்னையா மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டு விலக்கப்படாது என்று கூறிவிட்டது. ‘தேடபட்டு வரும் மற்றொரு மாணவர் தலைவனும் தடை செயப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான சிமி யின் தலைவர் மகனுமான உமர் காலித் கடந்து ஒரு மாத்தில் காஷ்மீர், பங்களாதேஷ், ஆப்கான் பயங்கரவாதிகளிடம் தொலைபேசியிருக்கிறான். இது அப்பட்டமான தேச விரோத செயல். இறுதி முடிவு காணாமல் விடுவதற்கில்லை’ எனத் தெளிவாக அறிவித்து விட்டது.
ஊடகங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை மிரட்டலாம் என்றால் அங்கும் பிளவு. டைம்ஸ் நவ்வின் அருணாப் கோஸ்வாமி தேசவிரோதிகளை கடுமையாக சாடியதோடு, பத்திரிகையாளர் தாக்குதல் போன்ற திசை திருப்பலுக்குள் சிக்காமல் பல்கலைக் கழகங்களில் எப்படி இத்தனை ஆண்டுகள் தேசியக் கொடி ஏற்றப்பட அனுமதி இல்லாதிருந்தது, பல்கலைக் கழகங்கள் எப்படி பயங்கரவாதிகளின் கூடாரமாகி வருகிறது என்று திசைமாறாமல் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
பொறுக்கவில்லை இதர ஊடகங்களுக்கு. அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். அமைப்பு சார்பு ஊடகங்கள் அவர் மீது தாக்குதல் நடத்த சமூக ஊடகங்கள் அவருக்கு பேராதரவு தெரிவித்து பதிவுகள் செதன. ய்ஐகுதணீணீணிணூணாஅணூணச்ஞ என்ற குறித்தொடுப்பு (டச்ண்டணாச்ஞ்) டிவிட்டர் வலைதளத்தில் முதல் இடம் பெற்றது. வழக்கம் போல் அமைப்பு சார் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இடையே நடை பெற்ற யுத்தத்தில் சமூக ஊடகமே உயர்ந்து நின்றது.
இருப்பினும் பிரச்சினை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு வழி செது கொண்டிருக்கிறார்கள். அப்போது தானே திசை திருப்பல் வெற்றி பெறும்? ஏன் அரசு பல்கலைக் கழகங்களில் மட்டும் இந்த தேச விரோத செயல்கள் நடை பெறுகின்றன, தனியார் பல்கலைக் கழக மாணவர்கள், பணத்தைக் கொட்டிப் படிக்கும் மாணவர்கள், ஒழுங்காத்தானே நடக்கின்றனர், மித மிஞ்சிய சலுகைகள்தான் இந்த மாணவர்களைக் கெடுக்கிறதோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தேச பக்தி பொருந்திய இளசுகளோ, அனைத்துச் சலுகையும் தந்து தன்னைப் படிக்க வைக்கும் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கும் நன்றி கெட்ட ஒருவருக்கு எதிராக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘தர்ம அடி’ யை பிரயோகிப்பதில் தவறில்லை, நீதிமன்றத்தின் மூலம் நீதி என்பதெல்லாம் காலத்திற்குள் நடப்பதல்ல என்கிறார்கள்.