முருகனின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். சிவபெருமான் மலையாக அமைந்த தலம் ஆகையால் திரு+பரம்+குன்றம். பரம்பொருளான சிவனே எழுந்தருளிய மலை. அதாவது இங்கு மலையே இறைவனின் சொரூபம். மலை மீது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும், கீழே முருகனும் மலையே வடிவமாக எழுந்தருளிய தலம் இது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் இங்கே குன்றே இறைவனின் வடிவமாக எழுந்தருளிய “தெய்வீக மலை” என்ற பெருமைக்குரியது. எனவே மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும்.
நமது தமிழின் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களுள் உள்ள திருமுருகாற்றுப்படை, பரிபாடல், பன்னிரு திருமுறைகளில் தேவாரப் பாடல், திருப்புகழ் வரையிலும் திருப்பரங்குன்றம் தல பெருமை உள்ளது. ஆக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான மலை இது.
இடைச்செருகல்
பொது ஆண்டு 1310ல் அலாவூதீன் கில்ஜியின் கையாளாக மாலிக்கபூர் தெற்கே வந்தார். 12ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் என்பவர், பாண்டிய நாட்டின் மீது ஆக்கிரமிக்க வந்து, திருப்பாண்டியன் படையை விரட்டி மதுரையை ஆக்கிரமித்தார். அந்த சிக்கந்தரை, திருப்பாண்டியன் கொன்றார் என்றும் கூறப்படுகிறது. இவரது தர்கா தான் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் குறிப்பிடப்படுகிறது. அதனை வைத்தே திருப்பரங்குன்றம் மலைமீது தர்காவை வைத்து மலையை ஆக்கிரமிக்க நடந்த முயற்சி என்பதே அப்பகுதி மக்கள் கூறும் சம்பவம்.
கோவிலை காத்த குட்டி பட்டர்
1792 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவம் மதுரையை முற்றுகையிட்டது. கோயில்களை அழிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற ஆக்கிரமிப்பில் இருந்து கோயிலை காக்க நிர்வாகத்திலும், பணியிலும் இருந்தவர்கள் போராட துவங்கினர். பிரிட்டிஷ் கிறித்துவர்களுக்கு பேய் என்றால் அச்சம் என்பதை அறிந்த குட்டி பட்டர், திருப்பரங்குன்றம் கோயில் கோபுரத்தின் மீது ஏறி, கோயிலை காக்கும் அரணாக இருந்திட எனது உயிரைக் தியாகம் செய்கிறேன் என்று சபதம் எடுத்து, அங்கிருந்து விழுந்து உயிர் தியாகம் செய்தார் என்பது வரலாறு.
சர்ச்சையின் துவக்கம்
19 ஆம் நூற்றாண்டில் மலையை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து, ஹிந்துக்கள் வழிபாடு நடத்த இடர்பாடுகள் செய்தார்கள். இதனால் ஹிந்துக்கள் முருகனின் மலைக்கு வந்த ஆபத்தை உணர ஆரம்பித்தனர். ஆங்கிலேய வருவாய்த்துறை ஆவணங்களில், திருப்பரங்குன்றத்தை “ஸ்கந்தர் மலை அல்லது சிக்கந்தர் மலை” என்று குறிப்பிட்டு, பிரிட்டிஷார் மத மோதலுக்கு தூபம் போட்டனர்.
இதனால் ஊக்கம்பெற்ற முஸ்லிம்கள், 1916 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியில் கலெக்டரிடம் 145வது பிரிவின் கீழ், மலையின் உரிமை கோரி தர்கா பெயரில் வழக்கு தொடுத்தனர். 1923 ஆம் ஆண்டு, மதுரை கீழமை நீதிமன்றம் 21 சாட்சியங்கள், 300 ஆவணங்களை பரிசீலித்து திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கு சொந்தமானது என்று கூறியது. அதேசமயம் தந்திரமாக சமரசம் மற்றும் கருணை அடிப்படையில், தர்காவை அகற்றாமல் விட்டது. மேலும் தர்கா மற்றும் கோயிலின் எல்லைகளை வரையறுத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ப்ரிவ்யூ கவுன்சில், வழக்குப் போனது. 1931ல் லண்டன் ப்ரிவ்யூ கவுன்சில், 1923ல் கொடுக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. மலை முழுவதும் முருகனுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது.
மலை தீபம்
கார்த்திகை தீபமானது மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் (1939−-45) காலக்கட்டத்தில், தீபம் மற்றும் புகை மூலமாக குண்டு வீசிடக்கூடும் என நினைத்து, பிரிட்டிஷ் கலெக்டர் மலை தீபம் ஏற்றுவதை தற்காலிகமாக மாற்றிட வைத்தார். அதன்பிறகு இதை பயன்படுத்தி, முஸ்லிம்கள் மலையை திட்டமிட்டு ஆக்கிரமிக்க முனைந்தனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் ஸ்தல விருட்சமான (மரமான) நெல்லி மரத்தின் மேல், முஸ்லிம்களின் பிறை பச்சைக் கொடியை கட்டிவிட்டனர்.
அப்போது அந்த பகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த சின்ன கருப்புத்தேவர், சுமார் 700க்கும் மேற்பட்டவர்களை திரட்டி, முஸ்லிம்களின் அடாவடியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக அப்போது தமிழக முதல்வராக இருந்த பிரகாசம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். சின்ன கருப்பு தேவரும், மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றப் போராடினார்.
மக்கள் போராட்டமாக
1980ல் இந்து முன்னணி துவங்கிய பிறகு, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற போராட்டத்தை மக்கள் போராட்டமாக கையில் எடுத்தது. இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த அட்வகேட் ராஜகோபாலன் தொடர் போராட்டம் மூலம், இந்துக்களின் உரிமைக்கு வலிமை சேர்த்தார். அதனால் திருப்பரங்குன்றம் உரிமைப் போராட்டமானது, தமிழக மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் அட்வகேட் ராஜகோபாலன் போராட்டத்தை நடத்தி, போலீஸ் தடியடியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். மேலும் அவர் உட்பட போராடியவர்களை அரசு கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தது. போராட்டத்தால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள், அவரை
10−-10−-1994 அன்று அவரது வீட்டின் முன்பே வெட்டி படுகொலை செய்தனர்.
இந்து முன்னணியின் தொடர் போராட்டம்
எனினும் இந்து முன்னணி தொடர்ந்து விடாமல் போராடி வந்தது. இந்நிலையில் சட்டப்போராட்டமும் நடந்தது. 1997ஆம் ஆண்டு, இந்து முன்னணி தொடுத்த வழக்கில், கோயில் நிர்வாகம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது கலெக்டர் தலைமையில் கூடிய அனைத்து தரப்பினரும், தர்கா மற்றும் முஸ்லிம் தரப்பினரும் மலை தீபம் ஏற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.
ஆனால் அரசியல்வாதிகள் இதில் இரட்டை வேடம் போட்டனர். அந்த ஆண்டு பக்தர்கள் சிலர் மலை தீபத்தை ஏற்றி, தங்கள் உரிமையை வெளிப்படுத்தினர். ஆனால் கோயில் நிர்வாகமும், தமிழக அரசும், ஹிந்துக்கள் உரிமைக்கு தடங்களை ஏற்படுத்தினர்.
மீண்டும் முஸ்லிம்கள் சதி
4-−12-−2024 அன்று, திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோயில் தெரு மலை மீதுள்ள தர்காவில் கந்தூரி (ஆடு பலியிட) செய்பவர்களுக்கு, அனைத்து வசதியும் இருக்கிறது என்ற அறிவிப்புப் பலகையை முஸ்லிம்கள் வைத்தனர். இது சமூக வளைதலங்களில் வெளியாகி, ஹிந்துக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஹிந்துக்களின் கடும் கண்டனத்தை அடுத்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாரால் அந்த அறிவிப்பு பதாகை அப்புறப்படுத்தப்பட்டது.
25-−12−-2024 அன்று காலை ஐந்து முஸ்லிம்கள், ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு தர்காவில் பலியிட்டு, தந்தூரி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர். காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
31-−12-−2024 அன்று திருமங்கலம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிக் கூட்டத்தில், காலம்காலமாக இருந்து வரும் வழக்கத்தின்படியே, இந்த ஆண்டும் தொடரும் என்று தீர்மானமானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ என்ற முஸ்லிம் அமைப்பு, 5−-1-−25 அன்று மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது.
இந்து முன்னணி தலைமையேற்று
தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த திமுகவின் ஆதரவால், முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்க, மலையை ஆக்கிரமிக்க சதி செய்தது, ஹிந்துக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹிந்துக்களின் உணர்வுகளை அரசுக்கு உணர்த்த, 18-−1-−2025 அன்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆலோசனை கூட்டமானது திருப்பரங்குன்றம் எஸ்.பி. மகாலில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தலைவர்கள், பக்தர்களுடன் மலை மீதுள்ள சிவன் கோயிலில், சாமி தரிசனத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் அரசு வழக்குத் தொடர்ந்தது.
சதிக்கு திமுக பகிரங்க உடந்தை
20−-1-−2025 அன்று, திமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளரும் திருச்சி மணப்பாறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் சமது திருப்பரங்குன்றம் வந்தார். அவர் திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை ஆகும், அங்குள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிடுவது நடைமுறை என்று கூறினார்.
22-−1−-2025 அன்று, திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், ராமநாதபுரம் எம்.பி. யான நவாஸ்கனி உடன் வந்தவர்களுடன் தர்காவிற்கு சென்றார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆடு பலியிட எப்படி தடை போட முடியும், நாங்கள் அங்கு அசைவ பிரியாணி சாப்பிட தடை போடுவீர்களா? என மிரட்டியதுடன், பத்திரிகையாளர்களிடம் இந்த மலையே சிக்கந்தர் மலை, இந்த மலை வக்ஃப் வாரிய சொத்து என கூறினார்.
சதி அம்பலமானது
27-−1-−2025 அன்று திமுகவும், கூட்டணி கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் ஒரு தீர்மானத்தை எழுதி, திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் அமைதியாக இருக்கிறோம். வெளிநபர்கள் யாரும் வழிபாட்டில் தலையிடக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
30-−1−-2025 திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில், திமுக எடுத்த நிலைப்பாட்டிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினர். இதில் பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்புகளை திட்டமிட்டு புறக்கணித்தனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது. குன்றம் காக்க, இந்து முன்னணி பிப்ரவரி 4 ஆம் தேதி, திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது.
திமுக ஹிந்துக்களின் தன்னெழுச்சியை ஒடுக்கிட, மதுரை மாவட்டத்தில் தடை உத்தரவை பிறப்பிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் இந்து முன்னணி, பாஜக பொறுப்பாளர்களை வீட்டுச் சிறையில் வைத்தது மாநில காவல்துறை. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தது.
பிப்ரவரி 4 ஆம் தேதி மதியம் 4 மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. ஒரு மணி நேரத்தில், முருக பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். உலகிற்கு முருக பக்தர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அந்த ஆர்பாட்டம் அமைந்தது.
முருக பக்தர்கள் மாநாடு
2025, ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடும், அதற்குமுன் பத்து நாட்கள் அறுபடை முருகன் அருட்காட்சியும் நடத்திட, இந்து முன்னணி அறைகூவல் விடுத்தது. அரசு தரப்பு பல்வேறு இடையூறுகளை தந்த போதிலும், நீதிமன்றம் மூலம் உரிய அனுமதி பெற்று வெகு சிறப்பாக முருகபக்தர்கள் மாநாடு நடைபெற்றது. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர், இதில் கலந்து கொண்டனர். உலகம் முழுவதிலும் சுமார் ஒரு கோடி பேர் கந்தசஷ்டி கவசம் பாடி, தங்கள் உரிமையின் வலிமையை பக்திப்பூர்வமாக வெளிப்படுத்தினர்.
மீண்டும் சட்டப்போராட்டம்
திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்கவும், கார்த்திகை தீபம் நாளில் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் சேர்த்து, ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவித்தது.
இவ்வழக்கை நீதிபதி நிஷாபானு மற்றும் மதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, ஜூன் 24 ஆம் தேதி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை தந்தனர். இதனால் அந்த தீர்ப்பினை ஆராய்ந்து, தீர்ப்பு சொல்ல நீதியரசர் விஜயகுமார் அவர்களுக்கு பட்டியலிடப்பட்டது.
இவரது தீர்ப்பு அக்டோபர் 11 ஆம் தேதி வெளியானது. அதில் முழு மலையும் கோயிலுக்கு சொந்தமானது, திருப்பரங்குன்றம் மலை குடைவரை கோயில் என்பதால், மலை வேறு – கோயில் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது, எனவே அதன் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றது தீர்ப்பு.
தீர்ப்பும் இறைவன் அருளும்
கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரடியாக மலை உச்சிக்கு சென்று பார்வையிட்டு, முழு விசாரணை மேற்ெகாண்டு, அக்டோபர் 10 அன்று மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடுத்த ஐவர் அதில் இடம்பெற வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
திமுக அரசின் சட்டவிரோத செயல்
2025 அக்டோபர் 10 ஆம் தேதி கொடுத்த தீர்ப்புக்கு, திமுக தலைமையிலான அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, மேல் முறையீடும் செய்யவில்லை. கார்த்திகை தீபம், வழக்கமான இடமான மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதித்தது.
நீதிமன்றத் தீர்ப்பின் மீது காலம் தாழ்த்தி, மேல்முறையீடு செய்தது, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இருவர் அமர்வு, தலைமை நீதிபதியின் தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பு கூறியது. இருந்தும் திமுக அரசு, நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுத்தது.
இதன்காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்த மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரி, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
வெட்கக்கேடான திமுகவின் செயல்
கோயிலுக்கு சாதகமாக, முருக பக்தர்களுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு போட்டது அரசாங்கமோ, எதிரானவர்களோ இல்லை. முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை நிர்வாகம் செய்யும் இந்துசமய அறநிலையத்துறை. இது எத்தகைய முரண்பாடு?
புதிய அரசு என்ன செய்யப்போகிறது?
கடந்த தேர்தலில் திமுக தோற்று ஆட்சியை இழந்தது. தேர்தலின் போது திருப்பரங்குன்றம் தொகுதியில் நின்ற வேட்பாளர் நிர்மல் குமார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் உறுதி அளித்தார். தவெக தலைமையிலான அரசு பதவி ஏற்றது. ஆனால் திமுக உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டை வாபஸ் பெறவில்லை.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விஷயத்தில், உச்சநீதிமன்றம் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வருகின்ற நவம்பர் 14 ஆம் தேதிக்குள் தெரிவிக்க கூறியிருக்கிறது. என்ன செய்யப்போகிறார் தமிழக முதல்வர் என்பது, முருக பக்தர்களான நமக்கு மட்டுமல்ல, திருப்பரங்குன்றம் முருகனும் காணப் போகிறார். முருகனின் சக்தியை உலகம் காண, தமிழகம் திருப்பரங்குன்றத்தில் கூட இருக்கிறது.
மக்கள் சக்தி
வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி, கார்த்திகை தீபத்திருநாள். அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டியது, முருக பக்தர்களான மக்கள் சக்தியால் தான் ஏற்பட வேண்டும். அத்தகைய எழுச்சியை பக்திப்பூர்வமாக தமிழகம் முழுவதிலும் நவம்பர் 14 ஆம் தேதி கந்த சஷ்டி நாளில் ஒரு லட்சம் இடங்களில் மனமுருகி கந்த சஷ்டி கவசம் பாடிட, இந்து முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் நவம்பர் 24 – திருவண்ணாமலை போல பல மடங்கு உற்சாகத்துடன் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு அருள் சாட்சியாக செல்வோம்.
கட்டுரையாளர்: பசுத்தாய் கணேசன்