தத்தெடுத்த எம்.எல்.ஏ

ஸ்ரீநகரின் பாகல்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் கோல்கப்பா விற்பனையாளர் வீரேந்திர பாஸ்வான் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவரின் வீட்டிற்கு துக்கம் விசரிக்க சென்ற பிகார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் லாலன் பாஸ்வான், கொல்லப்பட்டவரின்  மூன்று திருமணமாகாத மகள்களில் இருவரின் திருமண செலவுகளை தான் ஏற்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, அவரது மகள் நிது குமாரிக்கு தனது இல்லத்தில் தனது செலவில் திருமணம் செய்து வைத்தார். “நான் அவர்களை எனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதுகிறேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சித்து வருகிறேன்” என்று எம்எல்ஏ கூறினார். வீரேந்திராவின் மூத்த மகன் விக்ரம் குமார் கூறுகையில், “எம்.எல்.ஏ.வின் ஆதரவு மற்றும் சரியான வழிகாட்டுதலுக்கு நன்றியைத் தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பத்தினர் வாழ வழியின்றி இருந்தோம். எம்.எல்.ஏ எங்களுக்கு கடவுள் போன்றவர்” என்றார்.