ஜூலை 11 அன்று ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தை சேர்ந்த சங்கர் பிரசாத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூலை 12 காலை, துண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டுமா கிராமத்திற்கு அருகே அவரது சடலத்தை போலீஸார் கண்டெடுத்தனர். இந்த கொலையாளிகளை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கொலைசெய்யப்பட்ட சங்கர் வனவாசி கல்யாண் கேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பிரசாத்தின் மருமகன் பரிமல் டே கூறிய செய்தியில் “இந்தச் சம்பவம் ஜூலை 12 காலை எங்களுக்குத் தெரிய வந்தது. அவர் குறைந்தது ஆறு முதல் ஏழு முறை சுடப்பட்டார்,” என்று சொன்னார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்தது. மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகளின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.