நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி குறியீடு, கடந்த செப்டம்பர் மாதத்தில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வலுவான தேவைகள் மற்றும் புதிய வர்த்தக அதிகரிப்பையடுத்து, இந்த உச்சம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்., அண்டு பி., குளோபல் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில், 400க்கும் மேற்பட்ட சேவைத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்திய சேவைகள் துறையின் புதிய வணிகத்தில் கணிசமான அதிகரிப்பை காண முடிகிறது. இது கடந்த 2010 ஜூன் பிறகு இரண்டாவது வேகமான அதிகரிப்பாகும். சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், எஸ்., அண்டு பி.,யின் ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 61.00 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மாதமான ஆகஸ்டில் வளர்ச்சி 60.10 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
மொத்த விற்பனையின் அதிகரிப்பு தவிர, வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களின், தேவை அதிகரித்துள்ளதாக சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சரக்கு மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த குறியீடு, கடந்த ஆகஸ்டில் 60.90 புள்ளிகளாக இருந்த நிலையில் செப்டம்பரில் 61.00 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. சமீபத்திய பி.எம்.ஐ., முடிவுகள், இந்தியாவின் சேவை பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமான செய்திகளை கொண்டு வந்துள்ளன. கடந்த செப்டம்பரில், வணிக செயல்பாடுகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் புள்ளிகள்செப்டம்பர் 2022 54.3அக்டோபர் 55.1நவம்பர் 56.4டிசம்பர் 58.5ஜனவரி 2023 57.2பிப்ரவரி 59.4மார்ச் 57.8ஏப்ரல் 62.0மே 61.2ஜூன் 58.5 ஜூலை 62.3ஆகஸ்ட் 60.1செப்டம்பர் 61.0