விமானப்படைக்காக, ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விமானம், அடுத்த மாதம், 20ம் தேதி, இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விமானத்தை பெறுவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி, பி.எஸ்.தனோவா இருவரும், அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கின்றனர்.
நம் விமானப்படையில், ‘மிக் – 21’ ரக போர் விமானங்கள் தான் உள்ளன. விமான படையை வலிமை படுத்தும் நோக்கில், பிரான்சில், ராணுவ தளவாடங்களை தயாரிக்கும், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து, அதி நவீன, ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதையடுத்து, 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், டசால்ட் நிறுவனத்திடமிருந்து, 36 போர் விமானங்கள் வாங்க, 2016ல், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ரபேல் போர் விமானம், இந்தியாவிடம், அடுத்த மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்தியாவுக்கு வழங்கப்படும் ரபேல் விமானங்கள், அதி நவீன வசதிகள் கொண்டவையாக இருக்கும். பிரான்ஸ் ராணுவத்திடம் உள்ளதை விட, அதிக வசதிகள் கொண்டவை.ரபேல் போர் விமானங்களை இயக்க, விமானப்படை பைலட்கள் சிலருக்கு, பிரான்சில் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.ரபேல் போர் விமானம், இந்தியா வந்த பின், விமானப்படையின், 24 பைலட்கள், மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்கலுக்கு தீவிர பயிற்சிஅளிக்கப்படும்.
இந்தியாவுக்கு, கூடுதலாக, 36 ரபேல் போர் விமானங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது,. ‘ஜி – 7’ அமைப்பு மாநாட்டுக்காக, பிரான்சுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்து பேசுவார்.
அப்போது, இது தொடர்பான திட்டங்கள், ஒப்பந்தங்கள் முடிவாகும்.கூடுதலாக வழங்கப்பட உள்ள, 36 விமானங்கள் விலை, ஒப்பந்தப்படி வழங்கப்பட உள்ள, 36 விமானங்களின் விலையை விட குறைவாக இருக்கும்.