சீனாவை விட்டுக்கொடுக்காத இம்ரான் கான்

சீன கம்யூனிச அரசின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அப்போது அந்த பத்திரிகையாளர் சீனாவில் நடைபெறும் உய்குர் முஸ்லிம்கள் மீதான சீன கம்யூனிச அரசின் வன்முறை, இன அழிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான இம்ரான் கான், “இது பாசாங்குத்தனம். உலகின் பிற பகுதிகளில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை” என கருத்து தெரிவித்து தங்கள் நண்பனான சீனாவை பாதுகாத்தார். மேலும், ‘அரசியல் ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ எங்கள் நாடு சிக்கலை எதிர்கொள்ளும் போதெல்லாம் எங்களுக்கு ஆதரவாக நின்ற ஒரே நாடு சீனா. எங்கள் இருதரப்பு உறவு மிகவும் வலுவானது. உலக ஆட்சி முறைகளில், கம்யூனிச ஆட்சிமுறை சிறந்தது’ எனவும் சீனாவுக்கு தன் விஸ்வாசத்தை எடுத்துக்காட்டினார் இம்ரான் கான்.