கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீன அரசுக்கு மிக நெருக்கமாக உள்ளார் என்பது மற்ற உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்நிலையில் கனடா ராணுவம் குறித்த ரகசிய கடிதம் ஒன்று ‘ரிபெல் நியூஸ்’ எனும் அந்நாட்டு ஊடகத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்த கடிதத்தில், ‘கடந்த 2019 அக்டோபரில் ராணுவ விளையாட்டு போட்டிக்காக சீனாவுக்கு சென்ற பல ராணுவ அதிகாரிகளுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளன. அது சீனாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலகட்டம் என தெரிந்திருந்தும், அவர்களுக்கு பரிசோதனை எடுக்க கனடா அரசு மறுத்துவிட்டது. அவர்களை தனிமைப்படுத்தி விமானத்தில் அழைத்து வந்ததுடன் ரகசியமாக சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது கனடா அரசு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.