சில நாட்களுக்கு முன் பாரதத்தை சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்கும் என கூறியது அந்நாட்டு அரசு. இந்நிலையில் சிங்கப்பூரில், வேலைக்கு சென்ற பரமக்குடியை சேர்ந்த மைக்கேல் என்பவர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக அவர் சமூக வலைதளத்தில் பதிவுகள் இட்டார். இதனை கண்டுபிடித்த சிங்கப்பூர் அரசு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார் என கூறி, அவரை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, அவரை பாரதத்திற்கு திருப்பி அனுப்ப சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இனி அவரை எக்காலத்திலும் சிங்கப்பூருக்குள் அனுமதிப்பதில்லை எனவும் கூறியுள்ளது.