சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல அது உடலில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய ஒரு குறைபாடு மட்டுமே. நாம் மனது வைத்தால் அதை எளிதில் குணப்படுத்தலாம். மேலும் அது ஒரு தனி நோ அல்ல. அது சில பல நோகளின் தொகுப்பு. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப் போல ரத்தக்கொதிப்பு, அதிக கொழுப்பு போன்றவை வந்தவுடன் இலவச இணைப்பா வந்து ஒட்டிக்கொள்ளும் ஒன்றே இந்த சர்க்கரை நோய்.
நம் உடலில் ஏற்படும் அதிகப்படியான உடற்சூடுதான் சர்க்கரை நோக்கு மிக முக்கிய காரணம். இது நம் உணவுமுறை, வாழ்க்கைமுறை, வேலைபளு, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. எனவே, நம் உடலை உஷ்ணம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நீரை உண், உணவை குடி” என்பதற்கேற்ப பொதுவாகவே உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் சேர்த்து உண்ணவேண்டும் என்பது நம் அனைவருக்குமான பொதுவிதி. ஆனால், இந்த அவசர யுகத்தில் நாம் என்ன செகிறோம்? உண்மையில் பசி இருக்கிறதா, இந்த உணவு நம் உடலுக்கு ஏற்றதா என ஆராயாமல், என்ன உணவு, அதன் சுவை என்ன என்பதைக்கூட சரிவரக்கூட புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு அவசரகதியில் வேகவேகமாக கோழிபோல கொறித்துவிட்டுச் சென்று விடுகிறோம், இது நம் உடலுக்கு ஊறு விளைவிக்கும். சர்க்கரை நோயைத் தீர்க்க நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். திரிபலா, மருதம்பொடி, வேலம்பொடி போன்ற இயற்கை பற்பொடிகள், குளிப்பதற்கு வெந்நீருக்கு மாற்றாக சாதாரண குளிர்ந்த நீர் போன்றவைகளை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் வாரம் இருமுறை எண்ணைகுளியல் செவது உத்தமம்.
உணவு முறையிலும் சில மாற்றங்கள் அவசியம் தேவை. இரவில் ஊறவைத்த அதன் நீருடன் தினமும் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் வெட்டிய வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து அதையும் காலையில் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளையாவது சமைக்காத இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது கைமேல் பலன் கொடுக்கும். உடல்சூட்டை சமன்படுத்த அதிக நீர் அருந்த வேண்டும். மேலும், நீர் நிறைந்த காகறிகளான வெள்ளரி, வெண்பூசணி, சுரைக்கா, சௌசௌ போன்றவற்றையும் கீரை வகைகளையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளான வறுத்த, பொரித்த உணவு வகைகள், எண்ணை அதிகமாக உள்ள உணவு வகைகள், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், பழைய உணவுகள், அசைவ உணவுகள் போன்றவை உடற்சூட்டை அதிகரித்து கணையத்தை செயலிழக்க வைக்கும். எனவே இவைகளை கூடுமானவரைத் தவிர்க்கவேண்டும்.
காபி தேநீருக்கு மாற்றாகக் கொயா இலை தேநீர், மாவிலை தேநீர், அரைமூடி எலுமிச்சை தேன் கலந்த வெந்நீர், பட்டை லவங்கம் சுக்கு, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ போன்ற தேநீர் வகைகளை வெல்லம், பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பழசாறு, காகறி சாறுகள், கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலை போன்ற கீரைச் சாறுகள், காகறி சூப் வகைகள் போன்றவையும் நல்ல பலனை தரும்.
சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க யோகாசன பயிற்சியை தகுந்த ஆசிரியரைக் கொண்டு பயின்று தினமும் செவது நல்ல பலனை தரும். முடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளவேண்டியது அவசியம். தினமும் இருவேளை மூச்சுப்பயிற்சியும் தியானமும் நம் உடலுக்கு மிகுந்த பிராணவாயுவை அளித்து செம்மைப்படுத்துவதுடன் மனதையும் அமைதியாக்கும். இரவில் சரியான நேரத்தில் உறங்கச் செல்லும் பழக்கத்தை முடிந்தவரை கடைப்பிடிக்க முயல்வதும் சிறந்தது. உறங்கச் செல்லும்முன் தலைஉச்சி, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள் பகுதிகளில் லேசாக எண்ணெயை பூசிக்கொள்வதும் நற்பயனை தரும்.
தினமும் இரவில் திரிபலா அல்லது பகல் பொழுதில் இயற்கைமுறையிலான அகிம்சா எனிமா எடுத்துக்கொண்டு குடலை சுத்தம் செதுகொள்வதும் இயற்கை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
சர்க்கரையில்லா பாரதம் வலிமையான பாரதம்.
(கட்டுரையாளர் ஆரோக்கியபாரதி – வடதமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் 9283727270)