கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை இயக்குநரகம், அவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களான அபூபக்கர் பஜேதாத், அப்துல் ஹமீத் பிஎம், ஏ.எம் ஜலால், ராபின்ஸ் கே ஹமீத், பி.டி அப்து, முகமது ஷாபி, கே. ஹம்ஜத் அலி, பி.டி. அகமது குட்டி, ஹம்ஜாத் அப்துல் சலாம், ஷைஜால், முகமது ஷமீர், ரசல், அன்சில், பி.எஸ் சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான 30.245 கிலோ தங்கம், 14.82 கோடி ரூபாஇ சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது. முன்னதாக, அமலாக்கத்துறை கடந்த 23.12.2020ல் ரூ. 1.85 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்த்து. இதனையடுத்து இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 16.97 கோடியாகும்.