கூடா நட்பு கேடாய் முடியும்…!

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி  பாலிவுட் சினிமா பணியில் அதிரடி.ஆவேசம், வஞ்சம் ,பழிக்குப்பழி என்ற பார்முலாவில் அதிரடியாய் நடந்து முடிந்துள்ளது ஒரே நள்ளிரவில் அதிரடி திருப்பங்களை தந்து அனைத்திற்கும் பதிலடியையும்  கொடுத்துள்ளது ..நானோ எனது குடும்பமோ எந்த சூழ்நிலையிலும் ஆட்சி அதிகாரத்திற்கான பொறுப்பில் இருக்க மாட்டோம் மாறாக  ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து சாணக்கியனைப்போல ஆலோசனைகளை தந்து வழிநடத்தும் பொறுப்பில் இருப்பேன். ஏனென்றால் இந்த ஆட்சி மக்களால் என்னை நம்பி அளிக்கப்பட்டது . என்று முதன்முதலாக சிவசேனா பா ஜ க கூட்டணி அரசு மஹாராஷ்டிராவில் பதவி ஏற்றபோது சிவசேனையின் தலைவர் பாலா சாகேப் பால்தாக்கரே சொன்ன வாசகம் இது . ஆனால் அவரது வழிவந்த அவரது மகனான உத்தவ் தாக்கரே தனது புதல்வனை எப்படியாவது முதல்வராக ஆக்க ஆசைப்பட்டதன் விளைவு சிவசேனையை சோனியாவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முப்பது ஆண்டுகால நட்பை முறித்து கொண்டது.

1989 சட்டமன்ற தேர்தல் தொடங்கி கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் வரை பல்வேறு  பிரச்சனைகளோடு  பயணித்த இந்த கூட்டணி பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கருத்துக்களையும் ,முடிவுகளையும் எடுத்துள்ளது . 2007 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரதிபா பாட்டிலை தனது மண்ணின் மைந்தர் என்ற போர்வையில் ஆதரித்தது சிவசேனை. பின்னர் அடுத்த தேர்தலின்   காங்கிரஸின் பிரணாப் முகர்ஜியை ஆதரித்தது . மோடி தலைமையிலான சென்ற ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழைப்பு நடவடிக்கையையும் எதிர்த்து வந்தது  இப்படி அடிக்கடி கூட்டணிக்குள்  இருந்துகொண்டு காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகவே சிவசேனை இருந்துள்ளது.

சிவசேனை   2014 சட்டமன்ற தேர்தலில்  சரிபாதி இடங்களில் போட்டியிடலாம் என்ற பா  ஜ க  கோரிக்கையை நிராகரித்தது அதனால் தனித்து போட்டியிட்ட பா ஜ க  122 இடங்களுடன் முதலிடத்திலும் 66 இடங்களுடன் சிவசேனை இரண்டாமிடத்தையும் கைப்பற்றியது . பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு வந்த சிவசேனை ஐந்து ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தது . சென்ற தேர்தலில் தனித்து நின்று 122 இடங்களில் வென்ற பாஜக இந்த தேர்தலில் கூட்டணிசேர்ந்தும் 105 இடங்களில் மட்டுமே வெல்லமுடிந்தது . இருந்த போதிலும் கூட்டணி தர்மத்தை ஏற்று  ஆட்சியமைக்க முயன்ற போது பாஜகவை விட சரிபாதி இடங்களிலேயே வென்ற சிவசேனை முதல்வர் பதவி கேட்டு அடம்பிடித்தது ..

 பா ஜ கவிடம் தனது பேரம் படியவில்லை என்றதும் சிவசேனை எதிர்த்து அரசியல் செய்துவந்த காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது .    முதல்வர் துணைமுதல்வர் அமைச்சரவையில் யார்யாருக்கு எவ்வளவு இடங்கள் என பங்கிட்டு கொண்டு குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கஆட்சியமைப்போம்  என்றெல்லாம் கடந்த 15 நாட்களாக பேசிவந்தது எல்லாவற்றையும் அமைதியாக கவனித்து வந்த பாஜக ஒரேநாள் இரவில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது   டிசம்பர் முதல்வாரத்தில் ஆட்சி அமைப்பார்கள் என்று அறிவிப்பு  வெளியான சிலமணி நேரங்களிலேயே தேசியவாத காங்கிரஸின் அஜித்பவாருடன் சேர்ந்து பாஜக அரசு பதவியேற்றது  பா ஜ வுக்கு  தனிபெரும்கட்சி என்ற தகுதியும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸின் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற கட்சி தலைவர் என்ற கடிதமும் இருந்தது அதனைவைத்து புதிய ஆட்சி அமைய கவர்னர் வாய்ப்பளித்தார்.

காங்கிரஸ் உதவியோடு விடுமுறைதினமான  ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்தை கூட்டி மகாராஷ்டிரா மாநில ஆட்சியமைப்பு குறித்து முறையிட்ட காங்கிரஸ் கூட்டணி பிரச்சனையை நிதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள எண்ணியது .கவர்னர் எடுத்த முடிவு தவறு என்றால் இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பதனை சட்டமன்றத்தில் அல்லவா  முடிவு செய்ய வேண்டும் . புதிதாக  தேர்தெடுக்ககப்பட்ட உறுப்பினர்கள்  எல்லோரும்பதவி ஏற்றதும் எப்படியும் 15 நாட்கள் அவகாசத்தில்  சட்டசபையில்  சபாநாயகரை தேர்வு செய்யும் போது யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று தெரிந்து போய்விடும் எதெற்கெடுத்தாலும் அவசரமாக அதுவும் தலைமை நீதிபதி வீட்டின் கதவை தட்டும் காங்கிரஸ் என் 15 நாட்கள் பொறுமை காக்கவில்லை தங்களின் எம் எல் ஏக்கள் விலைபோய்விடுவார்கள் என்ற பயமா அல்லது எப்படியாவது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியே தீரவேண்டும் என்ற அதிகார ஆசையா . எல்லாவற்றிக்கும் மேலாக இப்படி அரசியல்வாதிகளின் வழக்குகளை தேசிய முக்கியத்துவம் என்ற பெயரில் அவசர வழக்காக விசாரிக்கும் உச்சநீதிமன்றம் என்றாவது சாமான்யன் ஒருவருக்காக இவ்வளவு சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு வழங்குமா என்பதையும் நினைத்து பார்க்கவேண்டியுள்ளது.

  அஜித்பவர் வந்துவிட்டால் தேசியவாத காங்கிரஸ் எம் ஏல் ஏக்கள் குறைந்தது 22 பேராவது அவர்பின்னாடி வருவார்கள் அவர்களை வைத்து சில சுயேட்சைகள் உதவியோடு ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என கைக்கு போட்ட அமித் ஷாவுக்கு தோல்வி கிடைத்துள்ளது . தங்களது எம் எல் ஏக்கள் அனைவரையும்  காங்கிரஸ் சிவசேனை தேசியவாதகாங்கிரஸ்கூட்டணி  ஒன்றுகூட்டி தங்கள் வசமுள்ள எம் எல் ஏக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதோடு அடுத்த ஆட்சி தங்களுடையதே என்பதையும் அறிவித்தனர் . மேலும் சரத்பவாரின் குடும்பத்தில் இருந்து அவரது கட்சியில் புரட்சி செய்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . தற்போதுவரை சரத்பவார் அவரையும் விட்டுவிட தயாரில்லை முன்னாள் அமைச்சர் சகன் புஜ்பாலை அவரது வீட்டுக்கு அனுப்பி சமாதானம் செய்ய முயற்சிகள் நடந்துள்ளது.அதன் விளைவாக துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அஜித் பவார். மீண்டும்  தேசியவாத காங்கிரஸ் முகாமுக்கு போய்விட்டார் பாவம் பட்னாவிஸ் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகிவிட்டது.

சரத்பவாரை எடுத்துக்கொண்டால் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் நபர் கழகமே குடும்பம் குடும்பமே கட்சி என்ற பார்முலாவை சிக்கென பிடித்தவர் . அவரது திட்டமும் அரசியலும் முழுக்க முழுக்க அரசியலை வியாபாரமாகவே கொண்டது . தனக்கு ஆதாரமின்றி எந்த ஒரு செயலையும் செய்யத்துணியாதவர் இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பை சரியாக பயன்படுத்துவது என்ற அடிப்படையில் சிவசேனையை ஆதரிக்கிறார். தனக்கு சாதகமான அமாம் சாமி அரசு அமைவது நல்லது என்ற சுயநலமும் முதன்மையான காரணமாகும் . அஜித் பவார் மூலம் பா ஜ க ஆட்சியிலும் இதே விஷத்தை சாதித்திருக்கலாம் என்றாலும் கூட அது சிவசேனை அளவுக்கு சுலபமாக அமைந்தெருக்கது என்பதே சரத்பவார் சிவசேனையின் பக்கம் நின்றதற்கு முக்கிய காராணம்.

இந்த அரசியல் நிகழ்வுகளால் மாநிலத்தில் சில மாற்றங்கள் நிகழலாம் . அதன் எதிரொலியாக மாநிலத்தில் ஆட்சி பொறுப்பேற்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே வெளிவந்த அயோத்தி  தீர்ப்பை அடுத்து ராமர் கோவிலுக்கு செல்வார் என அறிவிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவின் பயணம் தள்ளிவைக்கப்பட்டதும் , கூட்டணியை தர்மசங்கடத்துக்குள்ளாக்க கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்றே கூறப்படுகிறது இனிமேல் தான்மட்டுமே ஹிந்துத்துவ பாதுகாவலன் என்று  சிவசேனை சொல்லி கொண்டிருக்கமுடியாது. காங்கிரஸும் தான்மட்டுமே சிறுபான்மை மக்களின் நலனை பாதுகாக்க முடியும் என்று  மார்தட்ட முடியாது . பதவிக்காக கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டவர்கள் என்று இருவரையும் அவர்களது முன்னாள் ஆதரவு வாக்காளர்கள் நிராகரிக்கலாம் . பா ஜ க  மாநிலத்தில் தான்மட்டுமே இந்துத்துவ கொள்கைகளின் காவலன் என்று சொல்லிக்கொள்ள முடியும்.

எப்படியாவது பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை பெற்றுவிடலாம் என்று தப்பு கணக்கு போட்ட பட்னாவிஸ் கடைசியில் நன்கு நாட்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் . ஏற்கனவே கர்நாடகாவில் முயன்று தோல்வியடைந்த பின்னர் 18 மாதங்களுக்கு பின்னர் மீணடும் 17 எம் எல் ஏக்கள்ளை  ராஜினாமா செய்யவைத்து மீணடும் பா ஜ க ஆட்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம் . மகாராஷ்டிரத்தில் தற்போது  பா ஜ க வின் முயற்சி தோல்வியடைந்துள்ளது அவ்ளவுதான். பின்னாளில் காங்கிரஸ் சிவசேனை தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் பதவி கிடைக்காமல் போய்  அதிருப்தி எம் எல் ஏக்கள் உருவாகாமல் இருக்கமாட்டார்கள் எப்படியும் இந்த புதிய ஆட்சி கர்நாடக குமாரசாமிபோல எத்தனை மாதங்கள் நீடிக்கும்  என்பதனை சிவசேனையின் கூட்டணிக்கட்சிகளிடம் விட்டுக்கொடுக்கும் தன்மைக்கும் பேரம் படியும் போக்குக்கும் மட்டுமே வெளிச்சம் என்பதுதான்.