கொரோன பரவலை தடுக்க கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்த பட்டு வரும் இந்த சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.