காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை மோடி கோரினர் அதற்க்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்காவின் ஜனாதிபதி சமிபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க விஜயத்தின் போது டிரம்ப் அறிவித்தார். அதை தொடர்ந்து எதை சொல்லி சபையை முடக்கலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு இந்த விஷயம் அல்வா கிட்டியது போல், உடனே இந்த பிரச்னையை எழுப்பி தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். இரண்டு நாட்கள் கடந்தும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அவையிலும் வெளியிலும் தெளிவாக விளக்கிய பின்னரும் எதிர்க்கட்சிகள் அந்த பிரச்சனையை பிடித்துக்கொண்டு அவையை முடங்கின .
இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் ஒரு ஆக்கிரமிப்பாளர் பாகிஸ்தானுக்கும் காஷ்மிருக்கும் எந்தவிதமான இணைப்பு ஒப்பந்தமும் இல்லை அனால் இந்தியாவுக்கும் காஷ்மீர் ராஜா ஹரிசிங்க்குக்கும் இணைப்பு ஒப்பந்தம் உள்ளது அனாலும் காஷ்மீரில் உள்ள முஸ்லீம் பெரும்பான்மையை காரணம் காட்டி பதான் எனப்படும் பழங்குடிகளை ஏவிவிட்டு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு நடத்திய ஆக்கிரமிப்பே காஷ்மீரில் நடந்தது. எனவே இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் பகுதியை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதே நமது நிலைப்பாடும்
எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இது தெரியும் என்றாலும் எல்லாவற்றிலும் அரசியல் செய்து பழக்கப்பட்டு போன நம் அரசியல்வாதிகள் அதனை ஊதி பெரிதாக்கி மக்களையும் குழப்ப முயன்றனர் என்பதுதான் உண்மை.
சர்வதேச பிரச்சினைகள் குறித்தோ, வெளிநாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவு குறித்தோ அதிபர் ட்ரம்புக்கு அவ்வளவு நிபுணத்துவம் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில், இல்லாத ஒரு விஷயத்தைப் பேசி அசத்தும் திறன் அவரிடம் இருந்தது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. சமீபத்தில் ஜப்பானின் ஒசாகா மாநாட்டின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்த்துவைக்கும்படி கேட்டுக்கொண்டார் எனக் கூறினார் ட்ரம்ப். மோடியை விடுங்கள். இதுவரை இந்திய தலைவர்கள் யாருமே காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டைக் கோரியதே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு பிரச்சினை. இதை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம் என்பதில் உறுதியாக உள்ளன..
காஷ்மீர் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை இந்தியா மறுப்பதற்கு முன்பே அமெரிக்க வெளியுறவுத் துறை உடனடியாக மறுத்துவிட்டது. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள இதுதரப்பு பிரச்சினை எனக் கூறிவிட்டது. பிரச்சினை தீர உதவியாக இருப்போமே தவிர, ஒருபோதும் மத்தியஸ்தம் செய்வதில்லை என்பதில் எப்போதுமே அமெரிக்கா உறுதியாக உள்ளது. பிறகு, ஒசாகாவில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு குறித்து அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பிறகே, மத்தியஸ்தம் பற்றி பேசவில்லை என்பது உறுதியானது. யோகா, மெடிட்டேஷன் குறித்துப் பேசியதை, மீடியேஷன் என ட்ரம்ப் தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ என்றும் சிலர் கிண்டலடித்துள்ளனர்.
காஷ்மீர் குறித்து ட்ரம்ப் பேசியது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவருடன் சென்ற அதிகாரிகளுக்கும் காதில் தேன் பாய்ந்தது போன்று இருந்திருக்கும். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அது உண்மை இல்லை என்ற தகவல் வெளியானதும் அந்த விஷ‘ம் உப்புச்சப்பில்லாமல் போய்விட்டது. இம்ரானை வரவேற்க அமெரிக்கா தரப்பில் யாருமே வரவில்லை. மேலும் அவரும் ட்ரம்பும் கூட்டாக அறிக்கை வெளியிடவில்லை. இதிலிருந்தே இம்ரான் வரவை அமெரிக்கா பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பாகிஸ்தானில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்ற தகவலையும் வெளியிட்டார் இம்ரான். இது, சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான்தான் மையப்புள்ளியாக இருக்கிறது என்ற உலக நாடுகளின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிட்டது.
காஷ்மீர் குறிது ட்ரம்பின் பொய் கருத்துக்கு இந்தியாவில் பெரிய அளவில் யாரும் மதிப்பு கொடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டும் சத்தம் போட்டன. அது எதிர்பார்த்ததுதான். இந்திய அரசும் பிரச்சினையை பெரிதாக்காமல் கையாண்ட விதம், மோடி அரசின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்ற பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. அதேசமயம், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிவரும் பாகிஸ்தான், அது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து வருகிறது. பாகிஸ்தான் தலைவர்களும் ராணுவமும் மனது வைத்தால் மட்டுமே எப்போதாவது தீவிரவாதிகள் மீதும் அவர்கள் முகாம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை உலக நாடுகளும் அறிந்து வைத்திருக்கின்றன. அதையும் அவர்கள் தொடர்ந்து செய்வதில்லை.
தீவிரவாதத்தால் பொருளாதார ரீதியாகவும் கொள்கை ரீதியாவும் பாகிஸ்தான் அடைந்துவரும் பாதிப்பை அந்த நாடு உணரவேண்டும். அப்படிச் செய்தால் தான் அதல பாதாளத்தில் இருக்கும் பாகிஸ்தானை மீட்க முடியும். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அங்கிருக்கும் தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்க நடவடிக்கை எடுத்தால்தான் பாகிஸ்தானும் பிரச்சினை இல்லாமல் இருக்கமுடியும்.