நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர் பங்கேற்றனர்.
தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நாட்டில் சிலர் வன்முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது.
சமூகத்தில் சில அருவருக்க தக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்த தேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப்படுத்துவதற்காக திட்மிட்டு நடக்கும் சதியாகும்.
காஷ்மீரில் 370 என்ற சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பாராட்டுக்குரியது. இது மத்திய அரசின் தைரியமான நடவடிக்கை. இதன் மூலம் காஷ்மீர் மக்கள் நன்மை பெறுவர். இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.