ஒவ்வொரு மாதத்திற்கும் பல சிறப்புகள் உண்டு. மகாவிஷ்ணுவும் பிராம்மவும் சிவாபெருமனைக் காண முயற்சி செய்த போது அடிமுடி காண இயலாத லிங்கோற்பவராக காட்சியளித்த புராண கதையை நினைவுட்டும் வகையில் தீபத்திருவிழா கொண்டப்படுகிறது. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள்.
அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா. அன்று அனைத்து ஆலயங்களிலும் தீபத்திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்வாக பார்க்கப்படுவது சபரிமலை ஐயப்ப கோயில் திறப்பு. மற்றொரு விஷயம் திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபம் திருவிழா.
மலையே சிவபெருமானாக வணங்கக்கூடிய ஸ்தலம் தான் திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.